நீர்கொழும்பு புனித பீற்றர் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு ஜுப்லி விழாவும் புனித பேதுருவானவரின் திருவிழாவும் இன்று
ஞாயிற்றுக்கிழமை (29) கொண்டாடப்பட்டது.
நீர்கொழும்பு புனித பீற்றர் தேவாலயம் நிர்மாணிக்கப்பட்டு 150 ஆவது ஆண்டு நிறைவடைந்ததை
கொண்டாடும் நிகழ்வோடு,
புனித பேதுருவானவரின்
திருவிழாவும் இன்று கொண்டாடப்பட்டது.
இதனையிட்டு இன்று காலையில் கொழும்பு உயர் மறை மாவட்ட துணை
ஆயர் மேதகு
மெக்ஸ்வல் சில்வா ஆண்டகையின் தலைமையில் விசேட திருப்பலி வழிபாடுகள் இடம்பெற்றன.
நீர்கொழும்பு குரு முதல்வர் அருட் தந்தை பெட்ரிக் பெரேரா உட்பட கத்தோலிக்க
மதத் தலைவர்கள் பலர் நிகழ்வில் கலந்து
கொண்டனர்.
உலகலாவிய ரீதியில் புனித பேதுருவானவரின் பெருவிழா இன்று இடம்பெறுவது
குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment