நீர்கொழும்பு, தளுபத்தை - கட்டுவை அருள்மிகு
ஸ்ரீ செந்தூர் முருகன் ஆலயத்தின் முதலாம் வருட அபிஷேக விழா (சம்பஸ்ஸரா விஞ்ஞாபனம்) இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காலை 7 மணிக்கு நித்திய பூஜையுடன் நிகழ்வு ஆரம்பமானது.
கிரியைகள் யாவும் நீர்கொழும்பு சித்தி விநாயகர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ குகதாச
குகேஸ்வரக் குருக்கள் தலைமையில், ஆலயக் குரு சிவஸ்ரீ இராதா
கிருஸ்ணன் குருக்கள்
மற்றும் ஏனைய சிவாச்சாரியார்களின் உதவியுடன் இடம் பெற்றது.
நண்பகல் இடம்பெற்ற பூஜை நிகழ்வில் மேல் மாகாண அமைச்சர் நிமல் லான்ஸா அவரது
பாரியார் சகிதம் கலந்து சிறப்பித்தார்.
மாலை 7 மணிக்கு திருக்கல்யாணத்தைத் தொடர்ந்து சுவாமி வீதி வலம்
வருதல் மற்றம் அர்த்த சாம பூஜை என்பன இடம்பெற்றன.
No comments:
Post a Comment