மானியத் தொகைக்கு பதிலாக மீன் பிடி உபகரணங்களை வழங்குதல் போன்று மாற்றுத்
தீர்வுகளை முன் வைத்திருப்பது
பிழையானதாகும்;. எரிபொருட்களின் விலை கடந்த காலங்களில்
அதிகரித்துள்ளது. மண்ணெண்ணெய் விலையும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாத
நிலையேற்பட்டுள்ளது. மீனவர்களை தரையில் வைத்துக் கொண்டு கடலுக்கு தொழிலுக்கு
அனுப்ப முடியாது. குளிரூட்டி அறைகளில் அமர்ந்து கொண்டு தீர்மானம் எடுப்பது
பிழையானதாகும் என்று கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்
ஆண்டகை தெரிவித்தார்.
கடந்த 13 மாத காலமாக வழங்கப்படாதுள்ள
மண்ணெண்ணெய் மானியத்தை தொடர்ந்து வழங்குமாறும், இதுவரை வழங்கப்படாதுள்ள நிலுவைத் தொகையை வழங்குமாறும் கோரி நீர்கொழும்பு சிறு மீன் பிடித்துறை மீனவர்கள்
கடந்த திங்கட்கிழமை முதல் மேற்கொண்டு வரும்
சத்தியாகிரகப் போராட்டத்தை
நிறுத்திவிட்டு ஆரம்பித்துள்ள
சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை அடுத்து ,அந்த இடத்திற்கு வந்து கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை (18-6-2014) அன்று
மேற்கண்டவாறு தெரிவித்தார்.
உண்ணாவிரதப் போராட்டத்தறகு ஆதரவு
தெரிவித்து நீர்கொழும்பு மாநகர சபை முனறலில் கூடியுள்ள மீனவர்கள் மற்றும்
உண்ணாவிரதப் போராட்த்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மத்தியில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தொடர்ந்து கருத்து
தெரிவிக்கையில்
எனக்கு மீனவர்களின் பிரச்சினை நன்கு
புரிகிறது. ஜனாதிபதி முன்னர் வாக்குறுதி அளித்தபடி மீனவர்களுக்கு மண்ணெண்ணெய்
மானியம் சில மாத காலம் வழங்கப்பட்டது. பின்னர் அது நிறுத்தப்பட்டுள்ளது. மீனவர்கள்
12 மாத காலத்திற்கு மேலாக மானியம் வழங்கப்படாதுள்ளனர்.
விவசாயிகளுக்கு அரசு உர மானியம்
வழங்குகிறது. நூட்டின் மீன் தேவையை நிறைவு
செய்யம் மீனவரகளுக்கு எரிபொருள் மானியம் வழங்கப்படாதுள்ளது. அரசு ஒரு பக்க
சாரபாக நடந்து கொள்கிறது.இந்த விடயம் தொடர்பில் எனக்கு தீர்மானம் எடுக்க முடியாது.
ஜனாதிபதியும் அரசாங்கமும் இது
தொடர்பாக தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும். நான் ஜனாதிபதியுடன் உங்கள் பிரச்சினை
தொடர்பாக உரையாட உள்ளேன். ஜனாதிபதி கடற்றொழில் அமைச்சராக இருந்தமையினால் அவருக்கு
மீனவர்களின் பிரச்சினை நன்கு விளங்கும்.
அரசாங்கம் வரவு செலவுத் திட்ட
ஒதுக்கீட்டின் போது விவசாயிகளுக்கு உர மானியம் வழங்குவதற்கு நிதி ஒதுக்கீடு
செய்வது போன்று மீனவர்களுக்கும் எரிபொருள் மானியம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்ய
வேண்டும் என்று ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். நான் சமயத் தவைலவர் என்பதால்
எனக்கு வேண்டுகோள் விடுக்க மட்டுமே முடியும் என்றார்.
இதன் போது குரு முதல்வர் பெட்ரிக்
பெரேரா, அருட் தந்தை சமந்த பெர்னாந்து ஆகியோரும் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment