Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Thursday, June 19, 2014

மீனவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்கிறது: ஒருவர் சுகயீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில்

அரசாங்கம் வாக்குறுதி அளித்தபடி கடந்த 13 மாத காலமாக வழங்கப்படாதுள்ள  மண்ணெண்ணெய் மானியத்தை தொடர்ந்து வழங்குமாறும். இதுவரை வழங்கப்படாதுள்ள நிலுவைத் தொகையை வழங்குமாறும் கோரி  சிறு மீன் பிடித்துறை மீனவர்கள் கடந்த புதன்கிழமை (18) முதல் முதல் மேற்கொண்டு வரும் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.

கடந்த திங்கட்கிழமை முதல் மேற்கொள்ளப்பட்டு வந்த சத்தியாக்கிரகப் போராட்டம்; முடிவுக்கு கொண்டு வரப்பட்டே சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை மீனவர்கள் ஆரம்பித்துள்ளனர்.
நீர்கொழும்பு மாநகர சபை முன்றலில் இடம்பெறும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவாக பல நூற்றுக் கணக்கான மீனவர்கள் மாநகர சபை முன்றலில் ஒன்று கூடியுள்ளனர்.
இந்நிலையில். இன்று முற்பகல் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்த நீர்கொழும்பு குரு முதல்வர்  பட்ரிக் பெரேரா தலைமையிலான கத்தோலிக் மதத் தலைவர்கள் கொழும்பு மறை மாவட்ட பேராயர் கர்தினால்  மெல்கம் ரஞ்சித்தின் செய்தியை  அங்கு அறிவிவித்தனர்;.



பேராயர் கர்தினால்  மெல்கம் ரஞ்சித் ஜனாதிபதியுடன்  இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் . மீனவர்களுக்கு மட்டுமன்றி விவசாயிகள். தோட்டத் தொழிலாளர்கள் ஆகியோருக்கும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் நிவாரணம் வழங்க ஜனாதிபதி தீர்மானித்திருப்பதாக  அங்கு அறிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து அங்கு கூடியிருந்த  பல நூற்றுக் கணக்கான மீனவர்கள் மத்தியில் அமைதியின்மை ஏற்பட்டது. இதுதொடர்பில் மீனவர் சங்க பிரதிநிதிகள் கலந்துரையாடினார்.
இதனை அடுத்து பேராயர் கர்தினால்  மெல்கம் ரஞ்சித் நேரடியாக வந்து டிது தொடர்பாக அறிவிக்கம் வரையில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்வதென அஙகு் தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில். உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மூவரில் ஒருவர் சுகயீனமுற்ற நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

No comments:

Post a Comment