Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Wednesday, July 16, 2014

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ரொயிஸ் விஜித்த பெர்னாந்துவுக்கு நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை

நீர்கொழும்பில் அமைந்துள்ள நகை கடை மற்றும்  வெளிநாட்டு நாணய மாற்று நிலையமொன்றில்; இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள  மேல் மாகாண சபை உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின்  நீர்கொழும்பு அமைப்பாளருமான ரொயிஸ் விஜித்த பெர்னாந்து நீதிமன்ற அனுமதியின் பேரில் இன்று புதன்கிழமை (16-7-2014)  முற்பகல் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலைக்கு வைத்திய சிகிச்சைக்காக அழைத்து வரப்ட்டார்.

சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் பலத்த பாதுகாப்பின் மத்தியில்  அழைத்து வரப்பட்ட ரொயிஸ் விஜித்த பெர்னாந்து வைத்தியசாலையின் சிக்pச்சை பெற்ற பின்னர் சிறைச்சாலை வாகனத்தில் மீண்டும் அழைத்துச்  செல்லப்பட்டார்.


கடந்த 11 ஆம் திகதி நீர்கொழும்பு  நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது சிறைச்சாலை வைத்தியர் நீதிமன்றில் ஆஜராகி ரொயிஸ் விஜித்த பெர்னாந்து சளி காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக  தெரிவித்தார். இதனை கருத்தில் எடுத்த நீர்கொழும்பு பிரதான நீதவான் பூர்ணிமா பரணகமகே ரொயிஸ் விஜித்த பெர்னாந்துவுக்கு ; உரிய சிக்கிச்சை வழங்குவதற்கு அனுமதியளித்தார்.
கடந்த பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி   நீர்கொழும்பு  பிரதான வீதியில் அமைந்துள்ள நகை மற்றும்  வெளிநாட்டுநாட்டு நாணயமாற்று முகவர் நிலையத்தில் ஆயுத முனையில் முகத்தை முழுமையாக மறைக்கும் ஹெல்மட் அணிந்து வந்த துப்பாக்கிதாரிகள் நால்வரால்; ஒன்றரை கோடி கோடி ரூபாவுக்கு மேற்பட்ட பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ரொயிஸ் விஜித்த பெர்னாந்து மேலும் மூவர் கைது செய்யப்பட்டனர்.






  ரொயிஸ் விஜித்த பெர்னாந்து 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில்மேல் மாகாண சபையில் கம்பஹா மாவட்டத்தில்  போட்டியிட்டு 29 ஆயிரத்து 291 விருப்பு வாக்குகளைப் பெற்று கம்பஹா மாவட்டத்தில் ஆறாவது இடத்தைப் பெற்று மாகாண சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment