16 வயது பாடசாலை மாணவனை பாலியல்
துஸ்பிரயோகம் புரிந்த குற்றச்சாட்டில்
குற்றவாளியாக காணப்பட்ட பிலிப்பைன்ஸ் பிரஜைக்கு நீரகொழும்பு பிரதான நீதவான்
பூர்ணிமா பரனகமகே ஐந்து வருட காலம் ஒத்தி வைத்த ஒரு வருட சிறை தண்டனையும், 1500 ரூபா அபராதமும் வி;தித்தார்.
அத்துடன், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு 25 ஆயிரம் ரூபா பணத்தை நஸ்டயீடாக
வழங்குமாறும் நீதவான் உத்தரவிட்டதோடு, குற்றவாளியான பிலிப்பைன்ஸ் பிரஜையை
தனது நாட்டுக்கு திருப்பி அனுப்புமாறும் உத்தரவிட்டார். பிரென்டா என்ற
பிலிப்பைன்ஸ் பிரஜையே மேற்படி தண்டனையும் அபராதமும்;, நஸ்டயீட்டுத் தொகையும் விதிக்கப்பட்டவாராவார்.
பிலிப்பைன்ஸ் பிரஜையின் மனைவி
சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள தொழிற்சாலையொன்றில் முக்கிய பதவி வகிப்பவராவார்.
புpரதிவாதி ஏத்துக்கால பிரதேசத்தில்
வைத்து குறித்த சிறுவனை இந்த வருடம் ஜனவரி மாதம் துஸ்பிரயோகம் செய்துள்ளார்.
குறித்த சிறுவன் நீர்கொழும்பில் உள்ள
பாடசாலை ஒன்றில் கல்வி கற்பவராவார். முகவர் ஒருவர் மூலமாகவே அந்த சிறுவன்
பிலிப்பைன்ஸ் பிரஜையின் பாலியல் தேவைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த
தகவலை அடுத்து இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் வழக்கு விசாரணை
இடம்பெற்று கடந்த செவ்வாய்க்கழமை (15) தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
பிரதிவாதியை தாய் நாட்டுக்கு திருப்பி
அனுப்பும் உத்தரவு கடந்த வியாழக்கிழமை (17) வழங்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவை அடுத்து கடந்த
வெள்ளிக்கிழமை (18) பிரதிவாதியான
பிலிப்பைன்ஸ் பிரஜை தனது குடும்பத்துடன் தாய் நாட்டுக்கு சென்றார்.
இந்த வழக்கில் பிரதிவாதியின் சார்பில்
சட்டத்தரணி எம்.பி. எம். மாஹிர் ஆஜரனார்.
No comments:
Post a Comment