நீர்கொழும்பில்
அமைந்துள்ள கணனி கல்வி நிலையம் மற்றும்
ஆங்கில மொழி பேசும் பயிற்சி நிலையம் உட்பட மேலும் சில வர்த்தக நிலையங்கள்
அமைந்துள்ள மூன்று மாடிக் கட்டடித்தில் ஏற்பட்ட தீ விபத்;தில்
பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள்
எரிந்து நாசமாயுள்ளன.
இச்சம்பவம்
கடந்த வெள்ளிக்கிழமை (18) இரவு 9 மணியளவில் இடம்பெற்றது.
நீர்கொழும்பு
பிரதான பஸ் நிலையம் முன்பாக ரயில் பாதைக்கு அண்டியதாக அமைந்துள்ள 'டிஜி டெக்' நிறுவனத்தினால் நடத்தப்படும்
கணனி பயிற்சி வகுப்பு மற்றும் ஆங்கில மொழி பயிற்சி நிலையம் (பிரிட்டிஸ் வே இங்லிஸ் அக்கடமி) , கூட்டுறவு காப்புறுதி ஸ்தாபனம், கணனி உதிரிப்பாகங்களை விற்பனை செய்யும் நிலையம், அமைந்துள்ள கட்டிடத்திலேயே இந்த தீ விபத்து இடம்பெற்றது.
தீ சம்பவத்தின்
காரணமாக கட்டிடத்தின் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் மாடிகளுக்கே பலத்த சேதம்
ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த மாடிகளில் அமைந்திருந்த கணனி பயிற்சி வகுப்பு
மற்றும் ஆங்கில மொழி பயிற்சி நிலையங்களில் இருந்த கணினிகள் தளபாடங்கள் உட்பட பல
இலட்சக் கணக்கான ரூபாய் பெறுமதியான
உபகரணங்களுக்ககும் பொருட்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
கட்டிடத்தின் கீழ் தளத்தில் அமைந்துள்ள கூட்டுறவு காப்புறுதி ஸ்தாபனம், கணனி உதிரிப்பாகங்களை விற்பனை செய்யும் நிலையம்
என்பவற்றிற்கு சேதம் ஏற்படவில்லை.
தீ சம்பவம்
ஏற்பட்டவுடன் நீர்கொழும்பு மாநகர சபையின் தீ அணைப்புப் படைப் பிரிவினர் சம்பவம்
இடம்பெற்ற இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இரவு 10.30 மணியளவில் தீ முழுமையாக கட்டுப்பாட்டுக்குள்
கொண்டு வரப்பட்டது.
இந்த சம்பவத்தை
அடுத்து நீர்கொழும்பு பொலிஸார் பிரதான பஸ்
நிலையம் அமைந்துள்ள நிக்கலஸ் மார்க்கஸ் வீதியை வாகனப் போக்குவரத்து தடை செய்து தீ
அணைப்பு படைப் பிரிவின் வாகனங்களுக்கு தீயை அணைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கினர்.
தீ விபத்து
காரணமாக 30 இலட்சம் ரூபா
பெறுமதியான கணனிகளுக்கு சேதம் ஏறபட்டுள்ளதாக கணனி நிலையத்தை நடத்துவோர்
தெரிவித்தனர். கட்டிடத்திற்கு ஏற்பட்ட சேதம் இதுவரை கணக்கிடப்படவில்லை என்று
கட்டிடத்தின் உரிமையாளர் தெரிவித்தார்.
இதேவேளை, இந்த தீ சம்பவம் கட்டிடத்தில் ஏற்பட்டுள்ள மின்சார ஒழுக்கின்
காரணமாகவா அல்லது வேறு காரணங்களினால் ஏற்பட்டதா என்பதை அறிய நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை
மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment