நீர்கொழும்பு கல்வி வலயத்தில் ஆசிரிய ஆலோசகராக பணியாற்றும் திருமதி சிவமலர்
மனோகரன் கடந்த சனிக்கிழமை (19-7-2014)
அன்று காலமானார்.
நீர்கொழும்பு , கொச்சிக்கடை. தலுவகொட்டுவையை
வசிப்பிடமாகக் கொண்ட இவர் நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்தியக் கல்லூரியின்
முன்னாள் ஆசிரியராவார்.
திருமதி சிவமலர் மனோகரனுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். அவர்கள் தற்போது
கனடாவில் வசிக்கின்றனர். பெண் பிள்ளை திருமணமாகியுள்ளார். ஆண் பிள்ளை அங்கு தொழில்
புரிகிறார். கணவர்
ஏ.மனோகர் AIRPORT AVIATION BIA – KATUNAYAKA வில் தொழில் புரிகிறார்.
தற்போது பூதவுடல் நீர்கொழும்பு டப்ளியூ.எஸ். பெர்னாந்து மலர்ச்சாலையில்
அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
24-7-2014 அன்று காலையில்
தலுவகொட்டுவையில் உள்ள அன்னாரின் இல்லத்திற்கு பூ10தவுடல் எடுத்துச் செல்லப்பட்டு, கிரியைகள் இடம்பெற்று, அன்றைய தினம் மாலை 3.30 மணியளவில் நீர்கொழும்பு
இந்து பொது மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது.
No comments:
Post a Comment