முச்சக்கர வண்டியும் மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து
ஏற்பட்டதில்; ஒன்;பது மாத குழந்தை ஒன்று பலியாகியுள்ளது.
இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் நீர்கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.
பெரியமுல்லை, ஜும்மா மஸ்ஜித் வீதியைச்
சேர்ந்த ஒன்;பது வயதுடைய ஆண் குழந்தை
ஒன்றே சம்பவத்தில் மரணமடைந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
வுpபத்தில் மரணமடைந்த குழந்தையுடன் குழந்தையின் தாயும் குழந்தையின்
பாட்டியும் முச்சக்கர வண்டியில் பயணம் செய்துள்ளனர். நீர்கொழும்பு பிரதான வீதியில்
வைத்து பிரபல ஆடை விற்பனை நிலையம் அருகில் அந்த முச்சக்கர வண்டியுடன் மோட்டார்
சைக்கிள் மோதியுள்ளது. இதனை அடுத்து முச்சக்கர வண்டி குடைசாய்ந்து குழந்தை வெளியே
வீசப்பட்டுள்ளது.
இதனை அடுத்து காயமடைந்த குழந்தை நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு
செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. அங்கு சிக்pச்சை பலனின்றி குழந்தை இறந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment