நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றத்தின்
80 ஆவது ஆண்டு நிறைவையிட்டு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (27-7-2014) நினைவு முத்திரை மற்றும் விஷேட ஞாபகார்த்த உறை வெளியீடு என்பவற்றுடன் மன்றத்தின் அமுத விழா நிகழ்வுகள்
இடம்பெறவுள்ளன.
நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றத்தின்
தலைவர் பொ. ஜேயராமன் தலைமையில் மாலை
ஐந்து மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பமாகவுள்ளன.
இந்நிகழ்வில், தபால் சேவைகள் அமைச்சர் ஜீவன் குமாரணதுங்க பிரதம
விருந்தினராகவும், தபால் சேவைகள் பிரதி
அமைச்சர் சனத் ஜயசூரிய , தபால் சேவைகள் அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, தபால்மா அதிபர் டி.எல்.ஆர்.அபேரட்;ன ஆகியோர் சிறப்பு
விருந்தினர்களாகவும் கலந்து
கொள்ளவுள்ளனர்.
இந்நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு
நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றத்தின் பொதுச் செயலாளர் சு. நவரெட்னராஜா
கேட்டுள்ளார்.
No comments:
Post a Comment