Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Thursday, July 24, 2014

2014 ஆம் ஆண்டுக்கான வரியை குறைக்குமாறு கோரி: நீர்கொழும்பு நகர வரி பணம் செலுத்துவோர் சங்கம் மாநகர சபை முன்பாக ஆர்ப்பாட்டம்.

நீர்கொழும்பு நகர   வரி பணம் செலுத்துவோர் சங்கம் நேற்று புதன் கிழமை முற்பகல் 11 மணியளவில் நீர்கொழும்பு மாநகர சபை மண்;டபத்தின்  பிரதான வாயிலின் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது.
2014 ஆம் ஆண்டுக்காக மாநகர சபையினால் விதிக்கப்பட்டுள்ள  அதிகரித்த வரிப்பணத் தொகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் , 2013 ஆம் ஆண்டு அறவிட்டதற்கு அமைய 2014 ஆம் ஆண்டுக்கான வரியை அறவிடுமாறும் மேலும் சில கோரிக்கைகளை விடுத்தும் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

அதற்கு முன்னதாக நீர்கொழும்பு நகர   வரி பணம் செலுத்துவோர் சங்கத்தின்   பிரதிநிதிகள் மாநகர சபையின் ஆணையாளர் என்.பி.கருணாரத்ன, நீர்கொழும்பு பிரதி மேயர் எம்.எஸ் எம்.சகாவுல்லாஹ் ஆகியோரை மாநகர சபை மண்டபத்தில் அமைந்துள்ள அவர்களது  காரியாலயங்களில் சந்திந்து இது தொடர்பாக விளக்கப்படுத்தினர்.
இதன் போது நீர்கொழும்பு நகர   வரி பணம் செலுத்துவோர் சங்கத்தின் தலைவர் அருள் ராஜ், செயலாளர் எம்.ஜே. செல்டன் பெர்னாந்து,  பொருளாளர் என்க்லீட்டர்ஸ் சில்வா,  தொடர்புச் செயலாளர் நிஹால் பெர்னாந்து , சட்ட ஆலோசகர்  சட்டத்தரண்p கே.ஜி.குணதாச உட்பட பலர் கலந்து கொண்டனர்.




நீர்கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்திற்குட்பட்ட பிரதேசங்களில்  2014 ஆம் ஆண்டில் 400 வீதம் முதல் 1000 வீதம் வரை அதிகரித்த வரி அறவிடப்படுவதாகவும், இது தொடர்பாக மாநகர மேயருடன் கலந்துரையாடப்பட்ட போது, அதிகரித்த வரிக் கட்டணத்தை குறைப்பதற்கு மேயரால்  முடியவில்லை எனவும், அத்துடன் மாநகர சபையில் அதற்கான தீர்மானம் எடுக்கப்படவுமில்லை என அங்கு தெரிவிக்கப்பட்டது.
அத்தடன் கொழும்பு உட்பட ஏனைய உள்ள10ராட்சி சபைகளில் அறவிடும் தொகையை விட மிக அதிகமான கட்டணம் நீர்கொழும்பு மாநகர சபை அறவிடுவதாக அங்கு குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது.

2013 ஆம் ஆண்டுக்கான முழு வருட வரிக்கட்டணத்தோடு ஒப்பிடுகையில் 2014 ஆம் ஆண்டுக்கான புதிய வரிக்கட்டணத்தில்  மூன்று மாதம் கொண்ட ஒரு தவணைக்கான கட்டணம்  மிக அதிகமாகும். இதன் காரணமாக நகர  மக்கள் அதிகரித்த வரிக்கட்டணத்தை செலுத்த முடியாத நிலையில் உள்ளனர்.
;வ்வருடம் முதல் வீடுகளுக்கு அறவிடும் 8 வீத வரிக்கட்டணத்தை 2 வீதமாகவும், வியாபார நிலையங்களுக்கு அறவிடும் வரிக்கட்டணத்தை 14 வீதத்திலிருந்து 8 வீதமாகவும் குறைப்பதற்கு மாநகர சபையில் பிரேரணை கொண்டு வருமாறு மக்கள் வாக்குளால் தெரிவு செய்யப்பட்டுள்ள மாநகர மேயரிடமும் உறுப்பினர்களிடமும் வேண்டுகோள் விடுப்பதாக நீர்கொழும்பு நகர  பணம் வரி செலுத்துவோர் சங்கம் மாநகர சபையின் ஆணையாளர் என்.பி.கருணாரத்ன, நீர்கொழும்பு பிரதி மேயர் எம்.எஸ் எம்.சகாவுல்லாஹ் ஆகியோரிடம் கையளித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தம்மால் இயன்ற நடவடிக்கைகளை மேயருடனும் மாநகர சபை உறுப்பினர்களுடனும் கலந்துரையாடி எடுப்பதாக பிரதி மேயர் நீர்கொழும்பு நகர  பணம் வரி செலுத்துவோர் சங்க பிரதிநிதிகளிடம் குறிப்பிட்டார்.

அதன் பின்னர் மாநகர் சபையின் பிரதான  மண்டபத்தின் வாயிலின்  முன்பாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.




No comments:

Post a Comment