Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Sunday, July 27, 2014

கருச்சிதைவு செய்த பெண் சிகிச்சை பலனின்றி மரணம்

கருச்சிதைவு செய்ய முயன்ற பெண் ஒருவர் சுகயீன முற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி  கடந்த வெள்ளிக்கிழமை (25) பரிதாபகரமாக மரணத்தை தழுவியுள்ளார்.
காம்பிலியாவ, ஜனபதய, படல்கம, பிரதேசத்தைச் சேர்ந்த குலதிலக்க அத்தநாயக்க முதியான்சலாகே சுவர்ணா நந்தனி குலதிலக்க  என்ற 41 வயுதுடைய ஒரு பிள்ளையின்  தாயாரே சம்பவத்தில் மரணமடைந்தவராவார்.

குறித்த பெண்ணின் மரணம் கருச்சிதைவு மேற்கொள்ளப்பட்டதால் ஏற்பட்ட மரணம் என்று  நீர்கொழும்பு உதவி சட்ட வைத்திய அதிகாரி மலிந்த த சில்வா கடந்த வெள்ளக்கிழமை மேற்கொண்ட  பிரேத பரசோதனை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இச்சம்பவம்  தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது.
மரணமடைந்த பெண் ஏற்கனவே திருமணமாகி  கணவனை இழந்தவராவார். இரண்டு வருடங்களுக்கு முன்னர்  அவர் குவைத் நாட்டிற்கு பணிப் பெண்ணாக சென்றுள்ளர். அங்கு எமது நாட்டவர் ஒருவருடன்; தொடர்பு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக அவர் கருவுற்ற நிலையில்  அந்த நபருடன் இலங்கை வந்து அந்த குழந்தையை பெற்றுள்ளார். தற்போது அந்த குழந்தையின் வயது  ஒன்பது மாதமாகும். ஆயினும், இருவரும்  சட்ட ரீதியாக திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில்மீண்டும் அந்த பெண்; கர்ப்பமாகியுள்ளார்.
 கடந்த  புதன்கிழமை (23-72014) மெல்லவ கெதர பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலைககுச்  சென்று வைத்தியர் ஒருவரிடம் ஒருவரிடம்  சுகயீனத்திற்காக சிகிச்சைப் பெற்றுள்ளார்.  24 ஆம் திகதி வியாழக்கிழமை அவருக்கு கடும் சுகயீனம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து குறித்த அந்த வைத்தியரிடம் அந்தப் பெண் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
 அந்த வைத்தியர் தான் வழங்கிய மருந்தை மீளப் பெற்றுக் கொண்டு உடனடியாக நீர்கொழும்பு வைத்தியசாலையில்   குறித்த பெண்ணை அனுமதிக்குமாறு கூறியுள்ளார் .
நீர்கொழும்பு வைத்தியசாலையில் 24 ஆம் திகதி  அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை மரணமாகியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக கொட்தெனியாவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொணடு வருகின்றனர்.

No comments:

Post a Comment