நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றத்தின் 80 ஆவது ஆண்டு அமுத விழா நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை (27-7-2014) மாலை இடம் பெற்ற போது நினைவு முத்திரை மற்றும் விஷேட ஞாபகார்த்த உறை
என்பன வெளியீட்டு வைக்கப்பட்டன.
நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றத்தின் தலைவர் பொ. ஜெயராமன்
தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், முத்திரை வெளியீட்டு பணியகத்தின் முத்திரை வெளியீட்டுக்கு
பொறுப்பான அலுவலர் சி.என்.முனசிங்க, முன்னாள் தபால்மா அதிபர் காமினி ஆகியோர் அதிதிகளாக கலந்து
சிறப்பித்தனர்.
முதல் முத்திரையையும் ஞாபகார்த்த உறையையும் முத்திரை வெளியீட்டு
பணியகத்தின் முத்திரை வெளியீட்டுக்கு பொறுப்பான அலுவலர் சி.என்.முனசிங்க
வெளியிட்டு வைக்க அதனை நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றத்தின் தலைவர் பொ. ஜெயராமன்
பெற்றுக் கொண்டார். இதனை அடுத்து முதல் முத்திரையை தொழிலதிபர் ஸ்ரீ ராம் பெற்றுக்
கொண்டார்.
இரத்மலானை இந்துக் கல்லூரி ஆசிரியர் துணவியூர் கேசவன்
சிறப்புச் சொற்பொழிவாற்றினார். வரவேற்புரையை தமிழிலும் ஆங்கிலத்திலும் முறையே
நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றத்தின ஆட்சி மன்ற உறுப்பினர் ப. ரஜனி ராஜ்;, உப தலைவர் ஆனந்த சிவம் ஆகியோரும், நன்றி உரையை உப செயலாளர் பா. வெங்கடேசனும் நிகழ்த்தினர்.
இந்நிகழ்வில் இந்து இளைஞர் மன்ற அறநெறிப் பாடசாலை
மாணவர்களின் நடன நிகழ்வும் இடம்பெற்றதுடன் பெரும் எண்ணிக்கையானோர் கலந்து
கொண்டனர்.
No comments:
Post a Comment