நீர்கொழும்பு நகரில் கடந்த பல நாட்களாக குப்பை கூலங்கள்
அகற்றப்படாமை காரணமாக பொது மக்கள் பெரும்
அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்;.
நகரெங்கும் குப்பைகள்
குவிந்து காணப்படுகின்றன.
நீரகொழும்பு மாநகர சபையின் கழிவகற்றும் பிரிவினரால்
கொச்சிக்கடை ஒவிட்டியாவத்தை பிரதேசத்தில்
இது வரை காலமும் குப்பைகள் அகற்றப்பட்டு வந்தது. நீதிமன்ற உத்தரவை அடுத்து இம்
மாதம் 16 ஆம் திகிதி வரை
ஒவிட்டியாவத்தை பிரதேசத்தில் குப்பைகளை அகற்ற அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில், 16 ஆம் திகதிக்கு
பின்னர் குப்பைகள் அகற்றப்படாமை காரணமாக நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலை, சிறைச்சாலைகள் என்பவற்றில்
குப்பைகள் நிறைந்து காணப்படுகின்றன. வைத்தியசாலையில் குப்பைகளை உடனடியாக
அகற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால் கிருமி தொற்றுக்கள் ஏற்படும் அபாயம்
இருப்பதாகவும்,
வைத்தியசாலை
அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பாடசாலைகள் , அரச நிறுவனங்கள் மற்றும்
வீதிகளில்; தேங்கிக் கிடக்கும் குப்பைகள்
பெரும் சுகாதாரப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் உடனடியாக குப்பைகள் அகற்றப்படாவிட்டால்
ஓரிரு தினங்களில் நகரில் பெரும் சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படுவதை தடுக்க முடியாது என்று நகரவாசிகள் மேலும்
சுட்டிக்காட்டுகின்றனர்.
இதேவேளை,
நீரகொழும்பு
சுற்றலாத்துறை ஹோட்டல் உரிமையாளர்கள் இந்தப் பிரச்சினைத் தொடர்பாக நீர்கொழும்பு
மேயரிடம் நேற்றைய தினம் (19)
முறைப்பாடு செய்தனர்.;.
குப்பைகள்
அகற்றப்படாமை காரணமாக சுற்றுலாத்துறைக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர்கள்
மேயரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது தொடர்பகாக நீர்கொழும்பு மேயர் அன்டனி ஜயவீர
ஊடகங்களுக்கு தெரிவி;க்கையில்,
1985 ஆம் ஆண்டிலிருந்து
கொச்சிக்கடை ஒவிட்டியாவத்தை பிரதேசத்தில்
குப்பைகள் கொட்டப்பட்டு வந்தது. அப்போது அந்த பகுதி மக்கள் வசிக்காத சூன்யப்
பிரதேசமாக இருந்தது. தற்போது அங்கு மக்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர். மாநகர சபையினால் அங்கு அகற்றப்படும் குப்பைகள் காரணமாக பிரதேசத்தின் சுற்றாடல்
மாசடைந்துள்ளதாகவும், நுளம்புப் பெருக்கம் உட்பட
பல்வேறு சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டி பிரதேசவாசிகள்
வழக்குத் தொடர்ந்து அப்பகுதியில் குப்பைகளை அகற்றுவதற்கு தடையுத்தரவைப்
பெற்றுள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தினைத் தொடர்ந்து இந்த
பிரச்சினையை சிலர் அரசியலாக்கியதை அடுத்து தற்போதைய நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.
இதேவேளை, நீர்கொழும்பு மாநகர சபை
கழிவகற்றும் பிரச்சினைத் தொடர்பாக ஏற்பட்டுள்ள காரணங்களைத் தெரிவித்து மாவட்ட
நீதிமன்றத்தின் உதவியை நாடுவதற்கு
நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment