நீர்கொழும்பு தெற்கு
பிட்டிபனை பிரதான வீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை பிரதேசவாசிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் பின்னர் வீதியில் மறித்து எதிர்ப்புக் கோசங்களை
எழுப்பினர்.
தெற்கு பிட்டிபனை பிரதான வீதியில் பிட்டிபனை தேவாலயத்திற்கு சொந்தமான காணியில்
அமைந்துள்ள வீடொன்றையும் கடையொன்றையும்
நீதிமன்ற உத்தரவொன்றை அடுத்து உடைத்து நிர்மூலமாக்கியமைக்கும் அங்கு வசித்த
ஆறு பேர்களைக் கொண்ட குடும்பம் ஒன்று நிர்க்கதியானமைக்கும் எதிர்ப்பு தெரிவித்தே நீர்கொழும்பு மாநகர மேயர்
அன்டனி ஜயவீரவக்கு எதிர்ப்பு தெரிவித்து
இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
இது தொடர்பாக வீட்டுரிமையாளர் பிரான்சிஸ் சேவியர் தெரிவிக்கையில்.
எனது வீடு மற்றும்
கடை அமைந்துள்ள காணி பிட்டிபனை தேவாலயத்திற்கு சொந்தமானது. இந்தக் காணியில் சுமார்
நூறு வருடங்களுக்கு மேலாக பரம்பரை பரம்பரையாக
நாங்கள் வசித்து வருகிறோம். நூன் 18 வருட காலமாக எனது குடும்பத்துடன்
வசித்து வருகிறேன். இந்தக் காணி பிட்டிபனை தேவாலயத்திற்கு சொந்தமானது என்று
நீர்கொழும்கு மாவட்ட நீதிமனறத்தில் 4762 ஆம் இலக்கமுடைய வழக்கில்
தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. நாங்கள் இங்கு வீடு அமைத்து வாழ்வதற்கு பிட்டிபனை
தேவாலயத்தின் அருட்தந்தை எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆயினும், நேற்று திங்கட்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் கனரக வாகனங்கள்
கொண்டு எமது எதிர்ப்பையும் மீறி எனது வீடும் கடையும் உடைத்து
தரைமட்டமாக்கப்பட்டது. எமது வீடு சட்டவிரோதமாக கட்டப்பட்டது என்றால் பிட்டிபனை
பிரதேசத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள்
இதுபோன்று உள்ளன. நான் ஐக்கிய தேசியக் கட்சியின் தீவிர ஆதரவாளன் என்ற
காரணத்திலேயே மேயர் இந்த நடவடிக்கையை எடுத்தார் என்றார்.
இது தொடர்பாக
நீர்கொழும்பு மேயர் அன்டனி ஜயவீரவிடம் நீர்கொழும்பு மாநகர சபையின் ஐக்கிய
தேசியக் கட்சி உறுப்பினர் கயான் பெர்னாந்து சம்பவ இடத்திலிருந்து தொலைபேசி மூலமாக
தொடர்பு கொண்டு வினவினார்.
'முன்னாள் மேயர் ஹேர்மன்
குரேராவுக்கு பிரதேசவாசிகளால் செய்யப்பட்ட
முறைப்பாட்டின் அடிப்படையிலேயே வழக்கு
தொடரப்பட்டது. இந்த விடயம் தொடர்பாக தனது தலையீடு எதுவும் இல்லை' என்று தற்போதைய மேயர் அன்டனி ஜயவீர
தெரிவித்தார்.
இந்நிலையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து வீதியை
மறித்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை
வீதியில் இருந்து அகற்றினர்.
No comments:
Post a Comment