தூண்டில் கொண்டு மீன் பிடிக்க முயன்ற இளைஞர் ஒருவர்
மின்சாரம் தாக்கிப் நேற்று
செவ்வாய்க்கிழமை இரவு பலியாகியுளளார்.
இச்சம்பவம்
நீர்கொழும்பு பிட்டிபனை பாலத்தின் மேல் இடமபெற்றுள்ளது.
தளுபத்தை பிள்ளேவ வீதியைச் சேர்ந்த பவிந்து லலித் ரவிசங்க
ஜயவர்தன என்ற 20 வயதுடைய இளைஞரே மின்சாரம்
தாக்கி இறந்தவராவார். இளைஞனின் தாயார் இத்தாலியில் வசித்த வருகிறார். இளைஞன் தந்தை
மற்றும் சகோதரருடன் பெரிய தந்தையின்
வீட்டில் வசித்து வருகிறார்
இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
சம்பவத்தில் பலியான இளைஞன் தனது நண்பர்களுடன் நீர்கொழும்பு
பிட்டிபனை பாலத்தின் மேல் நின்றபடி தூண்டில் கொண்டு மீன் பிடித்துக்
கொண்டிருந்துள்ளார். உலோகத்திலான கைப்பிடியுடன் கூடிய தூண்டிலை அந்த இளைஞர்
பயன்படுத்தியுள்ளார். தூண்டிலை உயர்த்துகையில் மேல் இருந்த மின்சார வயரில்
தூண்டில் பட்டு மின்சாரம் இளைஞனை
மின்சாரம் தாக்கியுள்ளது என விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.
.
இதேவேளை
நீர்கொழும்பு வைத்தியசாலையில் இன்று பிரேத பரிசோதனை இடம்பெற்றது.
No comments:
Post a Comment