Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Thursday, February 5, 2015

பட்டுவத்தை ரயில் விபத்தில் மரணமடைந்தவர்களின் இறுதிச் சடங்கு ஞாயிற்றுக்கிழமை

நேற்று புதன்கிழமை ராகமை பட்டுவத்தை  புகையிரத நிலையத்தை அண்மித்துள்ள புகையிரத கடைவையில் ரயில் - கப்ரக வாகனம்  மோதி இடம்பெற்ற  கோர விபத்தில் மரணமான ஓரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரினதும் இறுதிச் சடங்கு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளதாக உறவினர்கள் இன்று தெரிவித்தனர்.

இந்த விபத்தில் கணவன் மற்றும் மூன்று பிள்ளைகளே மரணமடைந்தவர்களாரவர். முனைவி மற்றும் இளைய
மகள்
படுகாயமடைந்த நிலையில் தொடர்ந்தும் ராகமை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

 நீர்கொழும்பு நுகவெல வீதி ஹரிச்சந்திரபுரவைச்  சேர்ந்த 51 வயதுடைய   வர்த்கரான தர்மசிறி ராஜகுலதுங்க , அவரது பிள்ளைகளான மூத்த மகள் அஞ்சலி புரொபுத்தி (21 வயது), மகன் ஹர்ச தரிந்து (19 வயது), மகன் லஹிரு சாலிந்த ராஜகுரு (14 வயது) ஆகியோரே சம்பவத்தில் பலியானவர்களாவர்.
 துசாரிக்கா (40 வயது) , தருசி (12 வயது) ஆகியோரே இந்த விபத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் தொடர்ந்தும்; சிகிச்சைப் பெற்று வருபவர்களாவர்.



மூத்த மகள் அஞ்சலி புரொபுத்தி (21 வயது) விரைவில் திருமணமாக இருந்தவராவார். திருமணத்திற்கு தேவையான ஆடைகளும் ஆபரணங்களும் வாங்கியிருந்த நிலையிலேயே அவரது மரணம் இடம்பெற்றுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர். இரண்டாவது மகன் லஹிரு சாலிந்த ராஜகுரு (14 வயது) நீர்கொழும்பு சவ்த் சர்வதேச பாடசாலையில் எட்டாம் தரத்தில் கல்வி கற்கும்  மாணவராவார்.
இந்த விபத்து காரணமாக ஹரிச்சந்திரபுர பிரதேசவாசிகள் பெரும் சோகத்தில் இருப்பதை அவதானிக்க முடிந்தது.






No comments:

Post a Comment