நீர்கொழும்பு டொன்பொஸ்கோ தொழில் நுட்பக் கல்லூரி மாணவர்கள்
திடீரென உடல் உபாதைகளுக்கு உள்ளாகி நேற்று
ஞாயிற்றுக்கிழமை மாலை நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
மாலை நேர தேனீரை அருந்தி பாதிப்புக்குள்ளான 27 மாணவர்களே வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டவர்களாவர்.
யூரியா உரம் கலந்த
தேனீரை பருகியதன் காரமாகவே குறித்த மாணவர்கள்
மயக்கம், தலைவலி, வயிற்றுவலி போன்ற
உபாதைகளுக்கு உள்ளாகி வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
ஞாயிற்றுக்கிழமை
மாலை மாணவர்கள் நேர தேனீரை அருந்தும்
போது சீனி முடிவடைந்துள்ளது. இதனை அடுத்து
களஞ்சியசாலைக்குச் சென்று அங்கு சீனிக்கு பதிலாக
ஒரு கிலோ கிராம் நிறைக் கொண்ட இரண்டு யூரியா உரப் பைகளை தவறுதலாக எடுத்து வந்த மாணவர்கள்,
அதனை சீனி போட்டு
வைக்கும்; பாத்திரத்தில் இட்டுள்ளனர்.
இதனை அடுத்து சீனிக்கு பதிலாக யூரியாவை பயன்படுத்திய மாணவர்களே
பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தொழில் நுட்பக் கல்லூரி
மாணவர்கள் இன்று முற்பகல் வரை அங்கு சிகிச்சைக்காக இருந்ததை அவதானிக்க முடிந்தது.
மாணவர்களுக்கு பெரும் பாதிப்பு எற்படவில்லை எனவும் அவர்கள்
சிகிச்சைப் பெற்ற பின்னர் இன்று முற்பகல்
வீடு திரும்பினார்கள் எனவும்
வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி
தெரிவித்தார்.
No comments:
Post a Comment