Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Monday, February 16, 2015

விஜயரத்தினம் இந்து மத்தியக் கல்லூரி பழைய மாணவர் மன்றத்தின் 11 ஆவது வருட மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டி

நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்தியக் கல்லூரியின் பழைய மாணவர் மன்றம்  11 ஆவது வருடமாக நடத்திய  சினேக பூர்வ மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டியில்  'நிகம்பு ஏஸஸ் பி' அணி     (‘Negombo Aces - B ‘) வெற்றி பெற்றது.
இந்த சுற்றுப் போட்டியில் ரொக்கர்ஸ் அணி (Runner-up - " Rockers ) இரண்டாமிடத்தைப் பெற்றுக் கொண்டது.

கல்லூரியின் பழைய மாணவர் மன்றத்தின் தலைவரும் நீர்கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான சதீஸ் மோகன் தலைமையில்
  நீர்கொழும்பு கோட்டை மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ( 15-2-2015); போட்டிகள் நடைபெற்றன. இச்சுற்றுப் போட்டியின் பரிசளிப்பு நிகழ்வில் கல்லூரியின் அதிபர்  என் புவனேஸ்வர ராஜா , தொழிலதிபர்  முருகானந்தன்,ஆகியோர்  பிரதம விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர்.














  கல்லூரியின் பழைய மாணவர்கள் அடங்கிய 26 அணிகள் இச்சுற்றுப் போட்டியில் பங்குபற்றின.  ஒரு அணியில் அறுவர் பங்கு பற்றினர்.  முதலாம் சுற்று நான்கு  ஓவர்களைக் கொண்டதாகவும் இரண்டாம் சுற்று முதல் அரையிறுதி வரை மூன்று ஒவர்களைக் கொண்டதாகவும், இறுதிப் போட்டி   நான்கு ஓவர்களை கொண்டாதாகவும் அமைந்தன.

இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகனாகவும் சுற்றுப் போட்டியின் சிறப்பாட்டக்காரராகவும் , சிறந்த துடுப்பாட்டக்காரராகவும் நிகம்பு ஏஸஸ் பி' அணியைச் சேர்ந்த  எப்.ஏ.எம். அஸ்காப் தெரிவானார். சிறந்த பந்து வீச்சாளராக   நிகம்பு ஏஸஸ் பி' அணியைச் சேர்ந்த  ரி. அனோசன் தெரிவு செய்யப்பட்டார். அட்ரிக்  சாதனைக்கான விருதும் இவருக்கு வழங்கப்பட்டது. சிறந்த பிரகாசிக்கும் அணியாக  'ஸ்டெபனிட்டா பைட்டர்ஸ் பி' அணி  (Steppanita Fighters - A ) தெரிவு செய்யப்பட்டது.

வெற்றி பெற்ற அணிகளுக்கும் வீர்களுக்கும்  அதிதிகள் பரிசில்களை வழங்கினர்.

பெரும் எண்ணிக்கையான பழைய மாணவர்களும் நலன் விரும்பிகளும் இந்நிகழ்வில் பங்கு பற்றியமை குறிப்பிடத்தக்கது.



                          Best Batsman - Mr. F. A. M. Askaf - Negombo Aces - B 


                            Best Bowler - Mr. T. Anoshan -  Negombo Aces - B





                         Best Shining Team - Steppanita Fighters - A


           

                            hat-tricks Award - Mr. T. Anoshan  - Negombo Aces - B




                        Man of the Final Match - Mr. F. A. M. Askaf - Negombo Aces - B 



                       Man of the Series - Mr. F. A. M. Askaf -Negombo Aces - B 


                                               Runner-up - Rockers 


                          
                                            Winning Team - " Negombo Aces - B " 


                    


No comments:

Post a Comment