திருடப்பட்ட 15 இலட்சம் ரூபா பெறுமதியான
நகைகளுடன் நான்கு சந்தேக நபர்களை நேற்று
ஞாயிற்றுக்கிழமை (15) கைது செய்துள்ளதாக
நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் இருவர் ஆண்களாவர். இருவர்
பெண்களாவர். இவர்களில் இருவர் தாயும் மகனும் ஆவர். மற்றைய இருவர் கள்ளத் தொடர்பு வைத்துள்ள ஆணும் பெண்ணும் ஆவர்.
ரம்யலதா பெர்னாந்து, நுவன் பிரசாத் ஜயசேகர
ஆகியோரே தாயும் மகனுமாவர். இவர்கள்
கிம்புலாபிட்டிய பிரதேசத்தைச்
சேர்ந்தவர்கள் எனவும், ஏனைய இருவரும் குளியாபிட்டிய
பிரதேசத்சை; சேர்ந்த ஜோர்ஜ் நிசாந்த,
சமன் லதா எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரகள்
நால்வரும் மாதம்பை,
குளியாபிட்டிய, கிம்புலாபிட்டிய ஆகிய
பிரதேசங்களில் உள்ள வீடுகளில்;
திருடியுள்ளனர்.
பெண்கள் இருவரும் மேற்படி
பிரதேசங்களில் உள்ள வீடுகள் தொடர்பாகவும்
ஆட்கள் வீடுகளில் இல்லாத நேரங்கள் தொடர்பாகவும்
ஆண்கள் இருவருக்கும் தகவல்களை வழங்க ஆண்கள் இருவரும் பகல் அல்லது இரவு வேளைனளில் அந்த வீடுகளில்
திருடியுள்ளனர். ஆண்களில் ஒருவர் போதைப் பொருளுக்கு அடி;மையானவர் எனவும்
மற்றையவர் பெண்களுடன் விபசாரத்தில்
ஈடுபடுவதற்காக திருடியவர் எனவும் ,
பெண்கள் இருவரும்
திருடிய நகைகளை அடகு வைத்து பணம்
பெற்றுள்ளனர் எனவும் விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
சந்தேக நபர்களிடமிருந்து 15 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை பொலிஸார் மீட்டுள்ளனர். சந்தேக
நபர்களை நீமதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment