Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Monday, November 9, 2015

ஒரு இனம் தனது அடையாளத்தை பாதுகாக்க மொழி, கலை, கலாசாரங்களை பேண வேண்டும். - பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் வ. மகேஸ்வரன்

ஒரு இனம் தனது  அடையாளத்தை பாதுகாக்க மொழி, கலை, கலாசாரங்களைக் பேண வேண்டும். எமது பாரம்பரிய செயற்பாடுகளை  பேணுவதன் மூலமாக மொழி, கலாசாரப் பண்பாடுகளை பாதுகாக்க முடியும். அதற்காக இவ்வாறான கலை விழாக்கள் நடத்தப்பட வேண்டியது அவசியமாகும் என்று பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் வ. மகேஸ்வரன்   தெரிவித்தார்.
நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றத்தின் கலைமகள் விழா கடந்த  ஞாயிற்றுக்கிழமை (8-11-2015) மாலை மன்றத்தின் தலைவர் பொ. ஜெயராமன் தலைமையில் இந்து இளைஞர் மன்ற கலாசார மண்டபத்தில் நடைபெற்ற போதுஅதில் பிரதம விருந்தினராக கலந்து உரையாற்றுகையிலேயே பேராசிரியர் வ. மகேஸ்வரன்  மேற்கண்டவாறு  தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கொழும்பு பூபாலசிங்கம் புத்தகசாலையின்  நிர்வாக இயக்குனர் ஆர.;பி. ஸ்ரீதரசிங், திருமதி  நாகேஸ்வரி ஸ்ரீதரசிங் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும், விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி அதிபர் புவ​னேஸ்வரராஜா கௌரவ அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் வ. மகேஸ்வரன் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது,


 நீர்கொழும்பு நகரம் பல்லினங்கள் வாழுகின்ற பல்வேறு கலாசாரங்களை பேணிப் பாதுகாக்கின்ற நகரமாகும். நீர்கொழும்பு சம்பந்தமான செய்திக்ள அடிக்கடி பத்திரிகைகளில் வெளி வருகின்றன. அதுபோல் நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றத்;தினதும் விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியினதும் செய்திகளை பத்திரிகைகளில் அடிக்கடி காணக்கூடியதாக உள்ளது. நீர்கொழும்பு நகரின் அடையாளங்களாக இந்த இரு நிறுவனங்களும் அமைந்துள்ளன. இந்த நகரில் முற்போக்கு சிந்தனை உடைய பலர் வாழ்ந்திருப்பது மகிழ்ச்சக்குரியதாகும். இந்து இளைஞர் மன்றம் ஒரு  கல்விச்சாலை வேண்டும் என்று தூர நோக்கில்  அன்று சிந்தித்து செயலாற்றியதன் பயன்தான் விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியாகும். இந்த கல்லூரியில் பயின்ற பலர் இன்று  உயர்ந்த பதவிகளில் இருப்பதற்கும் நல்ல நிலையில் இருப்பதற்கும் பிரதான காரணம்  இந்து இளைஞர் மன்றம்தான்.
மாணவர்கள் கலை, இலக்கிய போட்டி நிகழ்ச்சிகளில் பங்கு பற்றி வெற்றி பெறுவதோடு நிற்கக்கூடாது. நாளை இந்த கலை, கலாசாரங்களை பாதுகாப்பதற்கு  தொடர்ந்து பங்களிப்பு வழங்க வேண்டும்.  கல்வி  என்பது சமூகத்தினதும் வாழ்க்கையினதும்  ஆதாரமாகும். கல்வி எமது கரங்களைப் பிடித்து நடக்கும். கல்வி, கலை, கலாசார செயற்பாடுகள்  வாழ்க்கையை வெற்றி கொள்வதற்கு உதவும் என்றார்.

இந்நிகழ்வில் போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்துடன் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

No comments:

Post a Comment