Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Saturday, April 23, 2016

நீர்கொழும்பு வெடிகந்த தீவிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்னின் தலைப் பகுதி மொட்டை ஆயுதம் ஒன்றினால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளது: பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிப்பு


நீர்கொழும்பு வெடிகந்த தீவு பிரதேசத்தின் வீடொன்றிலிருந்து கொலை செய்யப்பட்ட நிலையில்; கடந்த புதன்கிழமை பொலிஸாரால் மீட்கப்பட்ட வயோதிபப் பெண்ணின் சடலத்தை பிரேதப் பரிசோதனை செய்த நீர்கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி  குறித்த பெண்ணின் தலைப் பகுதி மொட்டை ஆயுதம் ஒன்றினால்  கடுமையாக தாக்கப்பட்டாதால்  ஏற்பட்ட மரணம் என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தலையில் கடுமையாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாகக் கருதப்படும் பெண்னொருவரின் சடலத்தை  நீர்கொழும்பு வெடிகந்த தீவு பிரதேசத்திலிருந்து நீர்கொழும்பு பொலிஸார் கடந்த புதன்கிழமை (20)  பகல் மீட்டுள்ளனர்.

முன்னக்கரை சிரிவர்தன பிரதேசத்தைச் சேர்ந்த மேரி ஜெட்டே என்ற 65 வயது பெண்னின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
சடலமாக மீட்கப்பட்ட பெண் தனது மகளின் வீட்டிலிருந்து  பகல் உணவு தயாரிப்பதற்காக  அவர் தங்கியிருக்கும் வெடிகந்த தீவிலுள்ள வீட்டுக்கு செல்வது வழக்கமாகும். சம்பவம் இடம்பெற்ற அன்று அவர் அவ்வாறு சென்றுள்ளார். ஆயினும்  உணவு சமைத்துக் கொண்டு தாயார் வீட்டுக்கு திரும்பி வருவதற்கு தாமதமானதால், மகள் தாயார் தங்கியுள்ள வீட்டுக்குச் சென்ற போது, தாயார் வீட்டில் இறந்த நிலையில் இருப்பதைக் கண்டுள்ளார். இதனை அடுத்து இது தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
; நீர்கொழும்பு பிரதான நீதவான்  சம்பவம் இடம்பெற்ற இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டார். பின்னர் இடம்பெற்ற பிரேத பரிசோதனையின் போது குறித்த பெண்ணின் தலைப் பகுதி மொட்டை ஆயுதம் ஒன்றினால்  கடுமையாக தாக்கப்பட்டாதால்  ஏற்பட்ட மரணம் இதுவென குறிப்பிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சமன்திலக்க தலைமையிலான குழுவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்



No comments:

Post a Comment