Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Monday, October 2, 2017

நீர்கொழும்பு வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தின் சிறுவர் தின விழா (PHOTOS)

நீர்கொழும்பு வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தின் சிறுவர் தின விழா இன்று திங்கட்கிழமை (2-10-2017)  அதிபர் எம். இஸட். ஷாஜஹான் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.
நீர்கொழும்பு கல்வி வலயத்தினால் பாடசாலை இணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள செல்வி காயத்ரி கௌசல்யா நிகழ்வில் பிரதம விருத்தினராக கலந்து சிறப்பித்தார்.
அதிபர் தலைமை உரை நிகழ்த்தினார். ஆசிரியை எம். நேசமலர் சிறுவர் தினம் தொடர்பாக சிறப்புரையாற்றினார்.

ஆசிரியை ரி.தர்ஷனி வரவேற்பு கீதம் இசைத்தார்.  தரம் 8, 9 வகுப்பு மாணவர்களின் வரவேற்பு நடனம், ஆசிரியை திருமதி எஸ்.டி. கௌசல்யாவின் நடனம்,  மற்றும் மாணவிகளின் நடனம் என்பனவும் நிகழ்வில் கலை நிகழ்ச்சிகளாக இடம்பெற்றன. அத்துடன் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கு பற்றிய விளையாட்டு நிகழ்ச்சிகளும்  இடம்பெற்றன. தொடர்ந்து பிரதம விருந்தினர் உரை இடம்பெற்றது.














நிகழ்வின் இறுதியில்  பரிசளிப்பு இடம் பெற்றது. சகல மாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டதுடன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
ஆசிரியர் எம.;ஆர். பிலீசியன்  நிகழ்வை தொகுத்து வழங்கியதுடன் உப அதிபர். ஏ.இ.கே. பெர்னாந்துபுள்ளே நன்றியுரை நிகழ்த்தினார்.

















No comments:

Post a Comment