Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Thursday, August 17, 2017

புதிதாக நிர்மானிக்கப்பட்டு வரும் திருமண மண்டபத்தின் ஒரு பகுதி உடைந்து விழுந்து நால்வருக்கு காயம் பெரியமுல்லையில் சம்பவம்

நீர்கொழும்பு கெனல் வீதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் திருமண மண்டபத்தின் ஒருபகுதி இடிந்து  விழுந்ததில் நால்வர் காயமடைந்து நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் இன்று (17) முற்பகல் 11.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கெனல்விவ்  கார்டின் ஹோட்டலின்  (Canal view Garden Hotel) ஒரு பகுதியாக கட்டப்படும் திருமண மண்டபத்தின் மூன்றாவது மாடிக்காக சீமெந்தினால் சிலெப் போடப்படும் போதே அது இடிந்து விழுந்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தை அடுத்து சிலெப் போடும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களில் நால்வரே காயமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
சம்பவத்தை அடுத்து  நீர்கொழும்பு தீயணைப்புப் படைப் பிரிவினர், பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து இடிபாடுகளிடையே  சிக்கியிருந்தவர்களை காப்பாற்றினர். ஒன்றரை மணித்தியால போராட்டத்தின் பின்னர் நான்காவது நபர் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலைக்கு அம்பியூலன்ஸ் வண்டியில் கொண்டு செல்லப்பட்டார்.  இவரை காப்பாற்றுவதற்காக கட்டட நிர்மானத்திற்காக அமைக்கப்பட்டிருந்த கம்பிகளை தீயணைப்புப் பிரிவி;னர்  பெரும் சிரமப்பட்டு வெட்டி அகற்றினர்.


செய்தியும் படங்களும். – எம். இஸட். ஷாஜஹான் 






சம்பவத்தில் காயமடைந்த தொழிலாளி ஒருவர் தெரிவிக்கையில் நாங்கள் வேலை செய்து கொண்டிருக்கும் போது திடீரென்  கட்டப்பட்டுக் கொண்டிருந்த சிலப்  திடீரென சரிந்து விழுந்தது. ஆறு பேர் மேல் தளத்தில் வேலை செய்து கொண்டிருந்தோம். நான்கு பேர் காயமடைந்துள்ளோம் என்றார்
 இதேவேளை  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள காயமடைந்தவர்களின் உயிருக்கு  ஆபத்து இல்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் பணிப்பின் பேரில் குற்றத் தடுப்பிரிவின் பொறுப்பதிகாரி ஆனந்த ஹேரத் தலைமையிலான  பொலிஸ் குழுவினர் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.








No comments:

Post a Comment