கடல் விமான சேவைக்கு எதிர்ப்பு தெரிவித்து நீர்கொழும்பு மீனவர்கள்ஆர்ப்பாட்டம்
கடல் விமான சேவையை (sea Plan) நீர்கொழும்பு களப்பினில் ஆரம்பிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீர்கொழும்பு மீனவர்கள் 11-11-2010 அன்று மலை 4.30 மணியளவில் நீர்கொழும்பு மாநகர சபை முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எதிர்ப்பு சுலோகங்ளை ஏந்தியிருந்த்துடன் கோசங்ளையும் எழுப்பினர்
இதன் பின்னர் மாநகர சபை மண்டபத்தில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் தயாசிறித்த திசேரா தலைமையில் இடம்பெற்ற கூட்டத்திலும் கலந்துகொண்டு தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.
கடல் விமான சேவை வேலைத்திட்டத்தை தற்காலிகமாக இடை நிறுத்துவதாகவும் இதுதொடர்பாக கலந்தரையாட மீனவ அமைப்புக்களின் பிரதி நிதிகளுக்கு அழைப்பு விடுப்பதாகவும் பிரதி அமைச்சர் தயாசிறித்த திசேரா அங்கு தெரிவித்தார்.இந்நிகழ்வில் பிரதி அமைச்சர் சரத் குமார குணரட்ன , மேல் மாகாண அமைச்சர் நிமல்லான்சா மேயர் ஹேர்மன் குரேரா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment