விமான சேவைகள் பிரதி அமைச்சர் தயாசிறித்த திசேராவினால் வாக்குறுதி அளிக்கப்பட்டமைக்கு மாற்றமாக தற்காலிகமாக இடைநிறுதப்படுவதாக அறிவிக்கப்பட்ட கடல் விமான சேவை வேலை திட்ட செயற்பாடுகள் (sea Plan) நீர்கொழும்பு களப்பினில் தொடர்ந்து மேற் கொள்ளப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீர்கொழும்பு மீனவர்கள் 17-11-2010 அன்று காலை 7 மணிமுதல் மாலை 5 மணி வரை எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எதிர்ப்பு சுலோகங்ளை ஏந்தியிருந்ததுடன் கோசங்ளையும் எழுப்பினர்.
அத்துடன் கட்டுநாயக்க பிரதேசத்தில் பிற்பகல் 2 மணி வரை வீதியை மறித்து மறியல் போராட்டம் நடத்தினர்.இதற்கு முன்னதாக கடல் விமான சேவை வேலை திட்டத்திற்காக களப்புப் பகுதி ஆளப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 300 படகுகள் . தோணிகள் மூலமாக அந்த இடத்திற்கு சென்று மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து களப்பில் வைக்கபட்டிருந்த பாரிய இயந்திரங்கள் அகற்றிச் செல்லப்பட்டன.
No comments:
Post a Comment