நீர்கொழும்பு மாவட்ட சாரணர் சங்கத்தின் தலைமையக கட்டிடத்திற்காக சீட்டிழுப்பு
நீர்கொழும்பு மாவட்ட சாரணர் சங்கத்திற்கு 35 இலட்சம் ரூபா உத்தேச செலவில் தலைமையக கட்டிடமொன்றை நிர்மாணிப்பதற்கு தேவையான நிதியை(15 இலட்சம் ரூபா) ஈட்டும் வகையில் மாபெரும் சீட்டிழுப்பு ஒன்று நடத்தப்படவுள்ளது.இதுதொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் 24-3-2011 அன்று மாரிஸ்டெல்லா கல்லூரியில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் நீர்கொழும்பு மாவட்ட சாரணர் சங்கத்தின் தலைவர் யூட்பெர்னாண்டோ புள்ளே, சங்கத்தின் செயற்றிட்ட தலைவரும் மாநகர சபை உறுப்பினருமான பிரதீப் பீரிஸ், நீர்கொழும்பு மாவட்ட சாரணர் ஆணையாளர் லலித்பெர்னாண்டோ உட்பட சாரணர் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
தலைமையகக் கட்டிடம் நீர்கொழும்பு கடோல்கலே பகுதியில் அமையவுள்ளது. சீட்டிழுப்பு 2011 மே மாதம் 28 ஆம் திகதி நடத்தப்படவுள்ளது

No comments:
Post a Comment