உலக கிண்ண கிறிக்கட் சுற்றுப் போட்டியில் இரண்டாமிடம் பெற்ற இலங்கை அணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்பு
பத்தாவது உலக கிண்ண கிறிக்கட் சுற்றுப் போட்டியில் இறுதிப் போட்டிக்கு தெரிவாகி இந்தியாவுடனான இறுதிப் போட்டியில் 6 விக்கட்டுக்களால் தோல்வி அடைந்து இரண்டாமிடம் பெற்ற இலங்கை அணி இன்று (3-4-2011) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தினூடக நாடு திரும்பியது.
இலங்கை அணித் தலைவர் குமார் சங்ககாரவை அமைச்சர் காமினி லொக்குகே மலர் மாலை அணிவித்து முதலில் வரவேற்றார்.பின்னர் அங்கு சர்வமத பிராத்தனை நிகழ்வு இடம்பெற்றது. பின்னர் ஊடகங்களுக்கு அணித் தலைவர் குமார் சங்ககார உட்பட வீரர்கள் பலர் கருத்து தெரிவித்தனர்.அதனை தொடர்து இலங்கை வீர்ர்கள் வாகன அணியினராக கொழும்பு டொரிங்டனை நோக்கி கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்டனர்.
No comments:
Post a Comment