25 வயதிற்கும் குறைந்தவர்கள் செய்து கொள்ளும் திருமணங்கள் 75 சதவீதம் தோல்வியில் சென்று முடிவடைவதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த தகவல் வெளியானதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
குடும்ப வாழ்க்கை தோல்வியில் முடிவடைவதற்கு காரணம் 25 வயதிற்கும் குறைந்து திருணம் செய்து கொள்வது எனவும், கிராம பகுதிகளில் இவ்வாறான திருமணங்கள் அதிகம் இடம்பெறுவதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நிரந்தர தொழில் இல்லாத ஒருவருக்கு இவ்வாறு திருமணம் செய்து வைப்பதால் சிறிது காலத்தில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு குடும்ப வாழ்க்கை தோல்வியில் சென்று முடிகிறது எனவும், கல்வி அறிவு குறைவும் குடும்ப வாழ்க்கை தோல்விக்கு ஒரு காரணமாகிறது எனவும் அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதேவேளை, காதல் திருமணங்கள் 30 சதவீதம் தோல்வியில் முடிவடைவதாக சுகாதார அமைச்சின் ஆய்வு மேலும் தெரிவிக்கின்றது.
No comments:
Post a Comment