பல இலட.;சம் ரூபா வெளிநாட்டு பணம் மற்றும் உள்நாட்டு பணத்தை வர்த்தகர் ஒருவரிடமிருந்து மோசடியான முறையில் ஏமாற்றி பெற்றுகொண்ட சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நீர்கொழும்பு மாநகர சகையின் எதிர்கட்சி தலைவர் ரொயிஸ் விஜித பெர்ணாண்டோ
உட்பட சந்தே நபர்கள் அறுவரையும் நீர்கொழும்பு பிரதான நீதவான் ஏ.என்.எம்.பி.அமரசிங்க இன்று வெள்ளிக்கிழமை பிணையில் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.சந்தேக நபர்கள் அறுவரும் தலா இரண்டு இலட்சம் ரூபா சரீரப்பிணையிலும் தலா 10 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டனர்.
வியாபார நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக வேபட வீதியில் வீடொன்றில் தங்கியிருந்த வர்த்தகர் ஒருவரை பொலிசார் போன்று நடித்து ஏமாற்றி அந்த வர்த்தகரிடமிருந்த 3500 யூரோ நோட்டுக்களையும் , 22 ஆயிரம் ரூபா பணத்தையும் அபகரித்த சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர் .
நீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்கட்சி தலைவர் இச்சம்பவத்தை அடுத்து பொலிசாரால் தேடப்பட்டு வந்த நிலையில் சட்டத்தரணியூடாக பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார்.
இந்த வழககு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
No comments:
Post a Comment