சோமாலிய
கடற்கொள்ளையர்களினால் பிடிக்கப்பட்டு கடந்த வாரம் ஸ்பைன் கடற்படை வீரர்களால்
மீட்கப்பட்ட இலங்கை மீனவர்கள் அறுவரும் நாளை காலை நாடு திரும்பவுள்ளனர்.
இவர்களை
வரவேற்க அவர்களது குடும்ப உறவினர்கள் கட்டுநாயக்க விமான நிலையம் செல்லவுள்ளதுடன் ,மீனவர்களை
வரவேற்பதற்கான ஏற்பாடுகளை குடும்பத்தினரும் பிட்டிபனை கிராமவாசிகளும் ஏற்பாடு
செய்துள்ளனர்.
சோமாலிய
கடற்கொள்ளையர்களினால் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 29 ஆம் திகதி இலங்கை மீனவர்களான எஸ்.கே.கே. வீரசிறி,
பெருமாள் செல்வராஜன்,வர்ணகுலசூரிய
சாந்த செபஸ்தியான், தினேஷ் சுசந்த
பெர்னாந்து, ஐசட ;நிசாந்த பெர்னாந்;து , வர்ணகுலசூரிய ஜேசுதாஸ் லியோன் ரொட்ரி;கோ ஆகியோர் கைது செய்யப்பட்டு கடத்தப்பட்டனர்.
இவர்கள்
அறுவரும் 'நிமேஸாதுவ'
என்ற பெயர் கொண்ட ரோலர் படகில் மீன்பிடிக்க
சென்றபோதே கடத்தப்பட்டு 68 கோடி ரூபா (6 மில்லியன்டொலர்) கப்பம் கோரப்பட்டிருந்தனர்.
இந்நிலையில்
ஆறு மாதங்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட இலங்கை மீனவர்களை ஸ்பெயின்
போர்க்கப்பல் கடந்த வாரம் மீட்டதுடன்
சோமாலிய கடற்கொள்ளையர்கள் 13 பேரையும் கைது செய்திருந்தது.
கடந்த
வருடம் செப்டம்பர் மாதம் 25 ஆம் திகதி நிமேஸா துவ என்ற டோலர் படகில்
மீன்பிடிப்பதற்காக குறித்த மீனவர்கள் அறுவரும் சென்ற போது சர்வதேச கடற்பகுதியில்
வைத்து படகில் எரிபொருள் தீர்ந்து போயுள்ள நிலையில் படகு தத்தளித்துக் கொண்டிருக்கையில்
சோமாலிய கடற்கொள்ளையர்களினால் செப்டம்பர் 29 ஆம் திகதி பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை
விடுவிப்பதற்கு கடற்கொள்ளையர்கள் 68 கோடி ரூபா கப்பமாக கேட்டிருந்த நிலையில் கடந்த 18 ஆம் திகதி ஸ்பைன் கடற்கடை வீரர்களும் தன்சானியா
அதிகாரிகளும் ஒண்றிணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் ஆறு மீனவர்களும்
விடுவிக்கப்பட்டனர்.
இன்றைய
தினம் (25)இலங்கை நேரப்படி பிற்பகல் 4.45 மணிக்கு தன்சானியாவின் தாருஸ்ஸலாம் நகர விமான
நிலையத்திலிருந்து இலங்கைக்கு புறப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள் நாளை (26)வியாழக்கிழமை காலை 7.45 மணியளவில் கட்டுநாயக
சர்வதேச விமான நிலையத்தை வந்தடையவுள்ளனர் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment