நீர்கொழும்பு கடற்கரை தெருவில் வைத்து வெள்ளை வானில் வந்தவர்களால கடத்தப்பட்ட 13 வயது சிறுவன் ஒருவன் , இரண்டு தினங்களின் பின்னர் கொழும்பில் வைத்து; விடுவிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கடந்த வியாழக்கிழமை (12 நண்பகல் வேளையில் கடற்கரை தெருவில் வைத்து வெள்ளை வானில் வந்த இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்ட சிறுவன், பின்னர் சனிக்கிழமை (14)கொழும்பு பஸ் நிலையம் ஒன்றி;ல் வைத்து விடுவிக்கப்பட்ட நிலையில் பஸ்ஸில் பயணித்து வீடு வந்து சேர்ந்துள்ளான்.
இது தொடர்பாக சிறுவனின் பெற்றோர் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
நீர்கொழும்பு அலஸ் வீதியை சேர்ந்த வர்ண குலசூரிய திலந்த நிமேஷ் (12வயது) என்ற சிறுவனே கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளவராவார்.
இச்சிறுவன் நீர்கொழும்பு நகர மத்தியில் அமைந்துள்ள பிரபல சிங்கள பாடசாலை ஒன்றில் ஒன்பதாம் தரத்தில் கல்வி கற்பவராவார்.
இச்சம்பவம் தொடர்பாக கடத்தப்பட்ட சிறுவன் தெரிவிக்கையில,
கடந்த வியாழக்கிழமை பிற்பபகல் 12.30 மணியளவில் கடற்கரை தெருவில் உள்ள ஐஸ் கிரீம் விற்பனை நிலையம் ஒன்றிற்கு ஐஸ்கிறீம் வாங்க நடையாக சென்றேன.; இதன் போது வெள்ளை நிற வான் ஒன்று திடீரென்று வந்து என்னருகில் நிறுத்தப்பட்டது.அதில் இருந்த ஒருவர் என்னை வாகனத்தில் இழுத்து போட்டாh.; .ஒருவர் எனது கண்ணையும் வாயையும் கைகளினால் மூடினார் .வான் பயணித்து கொண்டிருக்கையில் எனது கண்கள் துணியினால் கட்டப்பட்டது.
வாகனத்தில் வந்தவர்கள் சிங்களத்திலும் தமிழிலும் கதைத்தனர் .ஒன்றரை மணித்தியாலத்தின் பின்னர் வாகம் ஒரு இடத்தில் நிறுத்தப்பட்டது. அங்கு பலகையினால் கட்டப்பட்ட அறையொன்றினுள் நான் அடைக்கப்பட்டேன் .அந்த அறையில் யன்னல் இருக்கவில்லை மலசல கூடம் இருந்தது . அன்று இரவு பால Nதுநீர் குடிக்க தந்தனர்.
எனது தந்தை என்ன தொழில் செய்கிறார்? தாயார் என்ன செய்கிறார்? தந்தையிடம் பணம் இருக்கிறதா?என்பன போன்ற கேள்விகளை அவர்கள் என்னிடம் கேட்டனர் .தந்தை ஒரு மீனவர் எனவும் தாயார் தொழில் செல்வதில்;லை எனவும் நாங்கள் எனவும் அவர்களிடம் தெரிவித்தேன்
அடுத்த நாள் முழுவதும் அந்த அறையினுள் அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 14 ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலையில் எனது கண்கள் கட்டப்பட்ட நிலையில் மீண்டும் நான் வானில் ஏற்றப்பட்டேன் அரை மணித்தியாலம் பயணித்த பின்னர் வாகனம் பஸ்நிலையம் ஒன்றில் நிறுத்தப்பட்டது .
நீர்கொழும்பு நோக்கி செல்லும் 240 ஆம் இலக்க அரசாங்க போக்குவரத்து பஸ் டிக்கட் ஒன்றையும் 500 ரூபா பணத்தையும் என்னிடம் கொடுத்து அந்த பஸ்ஸில் ஏறி வீட்டுக்கு செல்லுமாறு கூறி அவர்கள் என்னை விடுவித்தனர் என்றார்.
இது தொடர்பாக கடத்தப்பட்ட சிறுவனின் தாயார் வர்ணகுலசூரிய மேரி மொனிக்கா ஜெயராணி(42 வயது) தெரிவிக்கையில் தவறுதலாக எனது மகன் கடத்தப்பட்டீருக்கலாம் அல்லது எங்களிடம் பணம் இருப்பதாக நினைத்து கப்பம் பெறும் நோக்கில் கடத்தப்பட்டிருக்கலாம். அல்லது எனக்கு கடன் பிரச்சினை ஒன்று இருக்கிறது அதன் அடிப்படையிலும் கடத்தப்பட்டிருக்கலாம் எப்படியோ எனது மகன் வீடு வந்து சேர்ந்ததையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன் . இச்சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளேன் என்றார்.
இச்சம்பவம் அப்பிரதேசத்தை சேர்ந்த மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது
No comments:
Post a Comment