உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் இன்று அதிகாலை தென் கொரியா சென்றுள்ளார்.
தென் கொரிய ஜனாதிபதியின் அழைப்பில்
சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ், எதிர்வரும் 27ம் திகதிவரை
அங்கு
தங்கியிருப்பார்.
ஜனாதிபதியின் இவ்விஜயத்தின் போது
இலங்கை - தென் கொரியாவிற்கு இடையில் பல்வேறு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதாக
ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் பந்துல ஜயசேகர தெரிவித்தார்.
பூசான் வணிக
மற்றும் கைத்தொழில் சபையின் அனுசரணையுடன் நடைபெறும் இலங்கை - கொரிய வர்த்தக
சங்கக் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உரை நிகழ்த்தவுள்ளதாகவும் ஜனாதிபதி
ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment