Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Thursday, April 19, 2012

கோழியிலிருந்து முட்டை வந்ததா? முட்டையிலிருந்து கோழி வந்ததா?

 கோழியிலிருந்து முட்டை வந்ததா? முட்டையிலிருந்து கோழி வந்ததா? என்பது மிக நீண்ட காலமாகவே கேள்விக்குரிய விடயமாக இருந்து வந்துள்ளது.
இப்போது அந்தகேள்விக்கு விடை கிடைக்கும் சம்பவம் ஒன்று இலங்கையின் வெளிமடை, கெந்திரிமுல்ல, நெடுன்கமுவ
பிரதேசத்தில் நடந்துள்ளது.
கோழியொன்று முட்டையிடுவதற்குப் பதிலாக தனது உடலுக்குள் பொரிக்கப்பட்ட குஞ்சை ஈன்ற சம்பவமே அதுவாகும்..

வெளிமடை, கெந்திரிமுல்ல, நெடுன்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஈ.எம்.ரஞ்சித் என்பவரின் வீட்டிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவரின் வீட்டிலுள்ள ஆறு கோழிகளில் ஒரு கோழி மாத்திரம் முட்டையிடாமல் இருந்தது. ஆனால் அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கும் வகையில் கோழிக்குஞ்சொன்றை அது ஈன்றது.

குஞ்சை ஈன்றபின் அக்கோழி இறந்துவிட்டது. எனினும் அக்கோழிக்குஞ்சு நலமாக உள்ளது.

இவ்வாறான ஒரு சம்பவத்தை தான் கேள்விப்படுவது இதுவே முதல் தடவை என வெலிமடை பிரதேச தலைமை மிருக வைத்திய அதிகாரி பி.ஆர்.யாப்பா கூறினார்.

'அந்த கோழியின் உடலை பிரித்துப் பார்த்தேன். அந்த முட்டை கோழியின் உடலிலிருந்து வழக்கமான வழியில் வெளிவரவில்லை. அது கோழியின் உடலுக்குள் அடை காக்கப்பட்டுள்ளது. இறுதியில் கோழியின் உடலிலிருந்து நேரடியாக கோழிக்குஞ்சு வெளிவந்துள்ளது. அம்முட்டை கோழியின் உடலுக்குள் 21 நாட்களுக்கு மேலாக இருந்துள்ளது' என அவர் கூறினார்.

முட்டையிலிருந்து கோழி வந்ததா?  கோழியிலிருந்து முட்டை வந்ததா?



No comments:

Post a Comment