சுமார் இரண்டு
வருடங்களுக்கு மேல் சிறை வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா
ஜனாதிபதி பொது மன்னிப்பின் அடிப்படையில் வெலிக்கடை சிறைச்சாலையில்
இருந்து இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அதற்கு முன்னதாக முப்படைகளின் முன்னாள் பிரதானி சரத் பொன்சேகா இன்று
முற்பகல் தான் சிகிச்ச்சைபெற்றுதனியார் வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார்.
சரத் பொன்சேகாவின் உடல் நிலை
தேறியுள்ளதால் அவர் வைத்தியசாலையில் இருந்து வெளியேற முடியுமென அவருக்கு
சிகிச்சையளித்த வைத்திய அதிகாரி வஜிர தென்னகோன் தெரிவித்திருந்தார்
இதற்கமைய,
முப்படைகளின் முன்னாள் பிரதானி சரத்பொன்சேகா வைத்தியிசாலையிலிருந்து வெளியேறினார்.
அதன் பின்னர் அவர் கொழும்பு உயர் நீதிமன்றத்திற்கு
அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு ,வெள்ளைக்கொடி
வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு
வாபஸ் பெறப்பட்டது. இதற்கான அனுமதியை உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழு வழங்கியது.
இதற்கு
மேலதிகமாக இரண்டாவது இராணுவ நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு எதிராக
தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவும் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
கொழும்பு உயர் நீதிமன்றத்திற்கு அழைத்து
வரப்பட்ட பின்னர் சரத்பொன்சேகா அங்கிருந்து வெலிக்கடை
சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்படார்.
சரத்
பொன்சேகாவின் விடுதலையை கொண்டாட அவரது ஆதரவாளர்கள் தேசிய கொடி மற்றும் பதாகைகளை
ஏந்தியவாறு வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்பாக கூடியிருந்தனர்.
வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்த சரத்
பொன்சேகா ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.
சிறைச்சாலையிலிருந்து
வெளியே வந்த சரத்பொன்சேகா அங்கு கூடியிருந்த மக்கள் முன்னிலையில் உரையாற்றினார்.
நாட்டு மக்களுக்காக
தனது வாழ்க்கையை அர்ப்பணிக்கவுள்ளதாகவும், நாட்டிலுள்ள அநீதிகளை அழித்து நாட்டை
அபிவிருத்தி பாதையில் கொண்டு செல்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தான்
தயாராகவுள்ளதாகவும், அதற்கு நாட்டு
மக்களின் ஆதரவை தாம் எதிர்பார்ப்பதாகவும் முப்படைகளின் முன்னாள் பிரதானி சரத்
பொன்சேகா அ,ங்கு தெரிவித்தார்.
No comments:
Post a Comment