சீதுவை தடுகம்
ஓயாவில் பாய்ந்து 17 வயது, இளைஞன்
ஒருவன் தற்கொலை செய்து
கொண்டுள்ளான்.
இச்சம்பவம் நேற்று (26) மாலை 5.30 மணியளவில்
இடம்பெற்றுள்ளது.
ஜா-எல , ஏக்கல, நவஜொசித்தாவத்தை பிரதேசத்தை
சேர்ந்த தினுக
மதுங்வத சொயிஷா என்ற இளைஞனே தற்கொலை செய்து கொண்டுள்ளவனாவான்.
காதல் விவகாரமே இந்த தற்கொலை
சம்பவத்திற்கு காரணம் என தெரிய வருகிறது.
குறித்த இளைஞன் கபொ.த.சாதரண
தரம் கற்றுவிட்டு சீதுவை பிரதேசத்தில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் வேலைக்கு
சேரந்துள்ளான்.அங்கு வேலை செய்த யுவதி ஒருவருடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது.
எதிர்வரும்
சனிக்கிழமை (30) தனது 17 ஆவது பிறந்த தினத்தை கொண்டாட இளைஞனின் தந்தை ஏற்பாடு
செய்திருந்த நிலையிலேயே தற்கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, நீர்கொழும்பு
மாவட்ட வைத்தியசாலையில் இன்று இடம் பெற்ற பிரேத பரிசோதனை அறிக்கையில் நீரில்
மூழ்கி மூச்சுத் திணறியதால் ஏற்பட்ட மரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சீதுவை பொலிஸார்
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment