கொழும்பு தேசிய
வைத்தியசாலையின் 11 ஆம் இலக்க சவ
அறையில் வைக்கப்பட்டுள்ள இனந்தெரியாத 35 வது மதிக்கததக்க
நபரின் சடலத்தை அடையாளம் காண உதவுமாறு நீர்கொழும்பு பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு
பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.
குறித்த நபர் கடந்த 14 ஆம் திகதி தலையில் பலத்த காயத்துடன் முச்சக்கரவண்டி
சாரதி ஒருவரால் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளார்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக உடனடியாக குறித்த நபர் கொழும்பு தேசிய
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு திவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு
அன்றைய தினமே சிகிச்சை பலனின்றி மரணமாகியுள்ளார்.
காயமடைந்த நபரை
வைத்தியசாலையில் அனுமதித்த நபரும் யார் என்பது தெரியவில்லை.
இந்நிலையில்
காயமடைந்த நபர் இறப்பதற்கு முன்னர் வைத்தியசாலை தாதியிடம் தனது பெயர் தினேஸ் என
தெரிவித்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
5 அடி 6 அங்குலம் கொண்ட குறித்த நபரின் தலை மயிர் கட்டையாக
வெட்டப்பட்டுள்ளதாகவும், குறித்த நபரின் வலது முழங்காலின் கீழ் பெரிய காயம்
ஒன்றின் அடையாளம் காணப்படுவதாகவும், அது போல் வலது முழங்கையின் கீழ் பகுதியில்
வெட்டுக் காயம் ஒன்றின் அடையாளம் காணப்படுவதாகவும், அந்த நபருக்கு மீசை மற்றும்
தாடி இல்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment