நீர்கொழும்பிலிருந்து
கொழும்பு நோக்கி சென்று
கொண்டிருந்த ரயில் கல்கத்தை சந்தி ரயில்கடவையூடாக
சென்று கொண்டிருக்கையில் சம்பவத்தில் இறந்த நபர் ரயிலை கவனிக்காமல் நடந்து சென்ற
போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அவ்வேளையில்,
ரயில் கடவையில் தரித்து நின்ற வாகனம் ஒன்று ஒலி எழுப்பி எச்சரித்த போதும் குறித்த
நபர் அதை பொருட்படுத்தாமல் சென்றுள்ளதாகவும், அவர் செவிப் புலன் அற்றவராக
இருக்கலாம் எனவும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்து;ள்ளனர்.
சம்பவத்தில்
மரணமடைந்த நபர் 70 இற்கும் 80 இற்கும் இடைப்பட்ட
வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment