சட்டவிரோத
மதுபான தயாரிப்பில் ஈடுபட்ட குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்ட நபருக்கு நீர்கொழும்பு
மேலதிக நீதவான் ரஜீந்ர யு. ஜயசூரிய நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை ஒரு இலட்சத்து 23 ஆயிரம் ரூபா அபராதம்
விதித்தார்.
அத்துடன்
பிரதிவாதியை ஒரு இலட்சம் ரூபா சரீரப்பிணையில் விடுதலை செய்யமாறும் நீதவான்
உத்தரவிட்டார்.
தாகொன்ன
பிரதேசத்தைச் சேர்ந்த மல்லவராச்சிகே சுனில் பிரியங்க என்பவரே பிணையில் விடுதலை
செய்ய உத்தரவிடப்பட்டவராவார்.
அபராத்
தொகையில் முதல் தவணைப்பணமாக 40 ஆயிரம் ரூபாவை செலுத்துமாறும் மிகுதிப் பணத்தை
இரண்டு தவணைகளில் செலுத்துமாறும், பிரதிவாதியை எதிர்வரும் அக்டோபர் மாதம் 8 ஆம் திகதி மீண்டும்
மன்றில் ஆஜர் செயயுமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
பிரதிவாதியை
நீர்கொழும்பு பொலிஸார் தாகொன்ன பிரதேசத்தில் வைத்து சட்டவிரோத மதுபான தயாரிப்பில்
ஈடுபட்டிருந்த போது சட்டவிரோத மதுபானம்
மற்றும் மதுபானம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட உபகரணங்களுடன் கைது செய்துள்ளனர்.
No comments:
Post a Comment