Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Sunday, June 17, 2012

ஆர்ப்பாட்டத்தில் துப்பாக்கிச் சூடுபட்டு கால்களில் ஒன்றை இழந்த மீனவர் தற்கொலை


 அரசாங்கத்தினால் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிலாபம் மீனவர்கள் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது துப்பாக்கிச் சூட்டினால் பாதிக்கப்பட்டு தனது கால்களில் ஒன்றை இழந்த மீனவர் கடந்த வெள்ளிக்கிழமை (15) தனது வீட்டில் வைத்து
தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நான்கு பிள்ளைகளின் தந்தையான சிலாபத்தைச் சேர்ந்த வர்ணகுலசூரிய ஜேசுமரிய கிங்ஸ்லி என்பவரே வறுமை காரணமாக தற்கொலை செய்து கொண்ட மீனவராவார்.

குறித்த மீனவர் தனது கால்களில் ஒன்றை இழந்ததன் பின்னர் தொழிலுக்கு செல்ல முடியாமல் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக அவரது 14 வயது மகன் பாடசாலை கல்வியை இடைநிறுத்திவிட்டு மீன்பிடித் தொழிலுக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றியுள்ளார்.

தனது இயலாமையை நினைத்தும் மகன் பாடசாலை செல்லாமல் தொழிலுக்கு செல்வதையிட்டும் மனமுடைந்த நிலையிலேயே அவர் தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட மீனவருக்கு அரசாங்கம் உரிய நஸ்டயீட்டை வழங்கியிருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்காது என பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.




No comments:

Post a Comment