நீர்கொழும்பு ஏத்துக்கால கடற்பகுதியில்
குளிக்கச் சென்ற இரு ரஸ்ய நாட்டவர்கள் நீரில் மூழ்கி இன்று காலை பலியாகியுள்ளதாக
ஏத்துக்கால உல்லாசப் பயணத்துறை பொலிஸார்
தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று முற்பகல் 10 மணியளவில் ஏத்துக்கால
டொபெஸ் ஹோட்டல் பின்பக்கமாகவுள்ள கடற்பகுதியில் இடம் பெற்றுள்ளது.
54
வயதுடைய ஆண் ஒருவரும்; 28 வயதுடைய பெண் ஒருவருமே
நீரில் மூழ்கி இறந்துள்ளவர்களாவர். இவர்கள் இருவரும்
உறவினர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
உறவினர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இரு வெளிநாட்டவர்களதும் சடலங்கள் பிரேத
பரிசோதனைக்காக நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை
மேற்கொண்;டுள்ளனர்
No comments:
Post a Comment