படகு சவாரி
சென்ற போது சீதுவை தடுகம் ஓயாவில் மூழ்கி இரு குடும்பஸ்த்தரகள் இன்று மாலை மரணத்தை
தழுவியுள்ளதாக ஜா-எல பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம்
இன்று மாலை 4.30 மணிக்கும் 5 மணிக்கும் இடையில் இடம்பெற்றுள்ளது.
சீதுவை - கித்திகொட
மரியகொரத்தி தேவாலயத்தின் வருடாந்த உற்சவத்தில் கலந்து கொண்ட பின்னர் உல்லாசமாக
படகு சவாரி சென்ற இருவரே படகு பாலம் ஒன்றின் தூணில் மோதியதை அடுத்து நீரில் மூழ்கி
பரிதாபகரமாக மரணத்தை தழுவியுள்ளனர்.
குறித்த தேவாலய
உற்சவத்தின் போது திருச்சொரூபம் தடுகம்
ஓயாவில் படகு மூலமாக எடுத்துச் செல்லப்படுவது வழக்கமாகும்.அதன் பின்னர் குறித்த
நபர்கள் படகு சவாரி சென்ற போதே விபத்து இடம்பெற்றுள்ளது. அதில் ஒருவர் உயிர்
தப்பியுள்ளார்.
நீர்கொழும்பு
பலகத்துறை - கொச்சிக்கடை பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய புஷ்பகுமார பொன்சேகா மற்றும் 48 வயதுடைய ரஞ்சித் மார்க்கஸ் பெர்னாந்து ஆகியோரே சம்பவத்தில்
பலியானவர்களாவர்.
இருவரது
சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
ஜா-எல பொலிஸார்
இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment