முன்னாள் அமைச்சர்
விஜேபால மென்டிஸின் பூதவுடல் மக்கள்
அஞ்சலிக்காக நீரகொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது
கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைப் பெற்றுவந்த
நிலையில் தனது 84 ஆவது
வயதில் நேற்று சனிக்கிழமை அவர் இயற்கை எய்தினார்.
அன்னார் 1953 ஆம் ஆண்டு நீர்கொழும்பு மாநகர
சபைக்கு இளவயது மேயராக தெரிவுசெய்யப்பட்டார். அதன் பிறகு 1960ஆம் ஆண்டுமுதல்
பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் போக்குவரத்து மற்றும்
நெடுஞ்சாலைகள் அமைச்சராக இவர் பதவி வகித்தார்.1993 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில்
சபாநாயகராக நியமிக்கப்பட்டார்.
பின்னர் 2001ஆம்
ஆண்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின்
ஆட்சிக்காலத்தில் செயற்குழு உறுப்பினராகவும் அன்னார் பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இறுதிச் சடங்கு
எதிர்வரும் புதன்கிழமை மாலை 3 மணிக்கு நீரகொழும்பில் இடம்பெறவுள்ளதாக
அறிவிக்கப்பட்டுள்ளது .
இதேவேளை,காலஞ்சென்ற முன்னாள்
அமைச்சர் விஜேபால மென்டிஸின் பூதவுடலுக்கு
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று பிற்பகல் மரியாதை செலுத்தினார்.
காலஞ்சென்ற முன்னாள்
அமைச்சர் விஜேபால மென்டிஸின் மனைவி மற்றும் மகள் ஆகியோரிடம் ஜனாதிபதி தனது
துக்கத்தை தெரிவித்தார்.
No comments:
Post a Comment