எதிர்வரும் திங்கட்கிழமை (3-9-2012) இலங்கை பொலிஸ்
படையணிக்கு (இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு ) 146 வருடங்கள் நிறைவடைவதையிட்டு இலங்கை பொலிஸ் படையணி எதிர்வரும்
திங்கட்கிழமை நாடு முழுவதும்
அந்த தினத்தை கொண்டாடவுள்ளது.
இதனையிட்டு நீர்கொழும்பு பிராந்தியத்திற்கு
பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அதிகாரியின் காரியாலயத்தினால் நாட்டில் இடம்பெற்று வரும்
பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பாக
மக்களுக்கு அறிவுறுத்தும் வகையிலும் இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு 146 வருடங்கள்
நிறைவடைவதை வெளிப்படுத்தும் வகையிலும் நடை பவணியொன்று இன்று (1-9-2012) நடத்தப்பட்டது.
நீர்கொழும்பு கடோல்கலே விளையாட்டு மைதானத்தில்
இன்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமான இந்த நடை பவணி நகரின் பிரதான விதியூடாகச் சென்று
நிறைவடைந்தது.
இந்நிகழ்வில் நீர்கொழும்பு
பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட
பொலிஸ் அதிகாரி சந்தன கலப்பதி, உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஓ.டப்ளியு.சில்வா ,
நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி காமினி அல்லவ , நீர்கொழும்பு
பிராந்தியத்திய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் , பொலிஸார் , பாடசாலை மாணவர்கள்,
சமய பாடசாலை மாணவர்கள் , சிவில் அமைப்பு பிரதிநிதிகள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.





















No comments:
Post a Comment