சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது ஆண்டு விழாவையிட்டு
இந்து ஸ்வயம் சேவக சங்கத்துடன் ;கம்பஹா மாவட்ட நீர்கொழும்பு
பிரதேச விழாக் குழு இணைந்து நடத்திய நீர்கொழும்பு பிரதேச மாநாடு மற்றும்
கலாசார ஊர்வலம் இன்று மாலை நீர்கொழும்பு இந்து இளைஞர் கலாசார மண்டபத்தில்
நடைபெற்றது.
நீர்கொழும்பு பிரதேச மாநாட்டுக் குழுவின் தலைவர் .ஆ.க.சொக்கநாதன் தலைமையில்
நடைபெற்ற இந்நிகழ்வில் இந்து பெண்மணிகள், மக்கள் சேவையே மகேசன் சேவை,மத மாற்றம், இந்து சமய ஒற்றுமை ஆகிய தலைப்புக்களில் உரைகள்
இடம்பெற்றன.
நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்ற அறநெறி பாடசாலை மாணவர்களின் வரவேற்பு நடனமும்
அங்கு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பெரும் எண்ணிக்கையானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment