சட்டவிரோதமான
முறையில் படகு மூலமாக அவுஸ்திரேலியாவிற்குச் செல்வதற்கு தயாரான ஆறு பேர்
நீர்கொழும்பு பொலிஸாரினால் இன்று அதிகாலை தலாஹேன பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது
செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி, கோப்பாய், பரந்தன் பிரதேசத்தைச்
சேர்ந்தவர்கள் எனவும், இவர்களை இன்று அதிகாலை இரண்டு மணியளவில் கைது செய்ததாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், சட்டவிரோதமாக செல்ல முயன்ற படகும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும்
பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, சந்தேக
நபர்களை பொலிஸார் இன்று நீதிமன்றில் ஆஜர் செய்தபோது
அறுவரையும் எதிர்வரும் 15 ஆம் திகதி ரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு பிரதான நீதவான் ஏ.எம்.என்.பி. அமரசிங்க உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment