கத்திமுனையில் நகை கடைக்குள் புகுந்து
நகைகளை கொள்ளையிட்டு தப்பிச் செல்ல முயன்ற நபர் ஒருவர் பொது மக்களால்
பிடிக்கப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார்
தெரிவித்தனர்.
இக் கொள்ளைச் சம்பவம் நேற்று சனிக்கிழமை இரவு 6.30 மணியளவில் நீர்கொழும்பு பிரதான வீதியில் உள்ள நகை கடையொன்றில் இடம்
பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிள்; ஒன்றில் வந்த இரு நபர்களில்
ஒருவர் திடீரென நகைகடைக்குள் புகுந்து அங்கு விற்பனைக்காக வாடிக்கையளர்களுக்கு
காண்பிக்கப்பட்டுக் கொண்டிருந்த நகைகளை கத்தி முனையில் கொள்ளையிட்டுள்ளார்.
பின்னர் அந்த நபர் வெளியில் மோட்டார் சைக்கிளில் தயாராக இருந்த நபருடன்
தப்பிச் செல்ல முயன்றுள்ளார்.இதன் போது கடை ஊழியர் ஒருவர் மோட்டார் சைக்கிளை
செல்லவிடாது தடுத்துள்ளார்.
இந்நிலையில் நகையை கொள்ளையிட்ட நபர் ஒடி தப்பிச் செல்ல முயன்றுள்ளார். இதன்
போது பொது பொது மகன் ஒருவர் அந்த நபரை துரத்திச் சென்று பிடித்துள்ளார்.ஆனால்
மோட்டார் சைக்கிளில் வந்த நபர் தப்பிச் சென்றுள்ளார்.
பின்னர் பிடிப்பட்ட நபரை நையப் புடைத்து பொது மக்கள் பொலிஸாரி;டம் ஒப்படைத்துள்ளனர்.
No comments:
Post a Comment