நீர்கொழும்பு களப்பை சட்டவிரோதமான முறையில் நிரப்புதல் மற்றும் வண்டல்
தாவரங்களை (கடோலான தாவரங்கள்) அழித்தல் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று முற்பகல்
நீர்கொழுப்பில் ஆர்ப்பாட்டமும் பேரணியும் இடம்பெற்றது.
நீர்கொழும்பு கொட்டுவ நகர சபை மைதானம் முன்பாக ஆரம்பமான இந்த பேரணி பிரதான
வீதி வழியாக நகர மத்தியில் அமைந்துள்ள மணிக் கூட்டு கோபுரம் அருகில் வந்து அங்கு
ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
இந்த எதிர்ப்புப் பேரணியை நீர்கொழும்பு ஸ்ரீவிமுக்;தி பெண்கள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.
பெரும் எண்ணிக்கையான மீனவ பெண்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில்
பங்குபற்றினர்.அவர்கள் எதிர்ப்பு கோசங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை
ஏந்தியிருந்ததுடன் எதிர்ப்பு கோஷங்களையும் எழுப்பினர்.
உலக உணவு தினத்தை முன்வைத்து இந்த
ஆர்ப்பாட்டம் இடம் பெறுவதாகவும், களப்பு
பாதிக்கப்பட்டுள்ளதன் காரணமாகமீன் பெருக்கம் குறைந்து மீனவர்களின் வாழ்வாதாரம்
பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு ஸ்ரீவிமுக்;தி பெண்கள் அமைப்பின்
இணைப்பாளர் தீபா சுபாஷினி தெரிவித்தார்.
No comments:
Post a Comment