வடக்கு கிழக்கில் பிரச்சினை இருக்கிறது. அதனை தீர்க்க வெளிநாடுகள்
அவசியமில்லை. சில நாடுகள் இப்பிரச்சினையில் சுயலாபம் தேட முயற்சிக்கின்றன என்று
கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்தார்.
நீர்கொழும்பு தம்மிட்ட கார்தினல் கூரே மத்திய நிலையத்தில் இன்று இடம்பெற்ற
ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கையிலேயே பேராயர் கர்தினால் மெல்கம்
ரஞ்சித் மேற் சொன்னவாறு குறிப்பிட்டார்.
இந்த ஊடகவியலாளர் மாநாடு நீர்கொழும்பு பிரதேச உப தலைவர் அருட்தந்தை பெட்ரிக்
பெரேராவின் தலைமையில் இடம்பெற்றது.
நீர்கொழும்பு நகரில் வாழும் கத்தோலிக்க மக்கள் எதிர் நோக்கும் சமய மற்றும்
சமூக ரீதியான பிரச்சினைகள்;, மீனவர்கள் எதிர்நோக்கும்
பிரச்சினைகள், களப்பு மற்றும் சுற்றாடல் வளங்கள் சூறையாடப்படல் மாசடைதல் தொடர்பான
பிரச்சினைகள், ஏனைய இனங்களை சேர்ந்த
மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் , மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி
வைத்து நடத்தப்படு;ம் போதைப் பொருள்,மதுபானம்
மற்றும் ஒழுக்க விழுமியங்கள் தொடர்பான பிரச்சினைகள், உட்பட பல்வேறு பிரச்சினைகள்
தொடர்பாக் இந்த இந்த ஊடகவியலாளர் மாநாட்டில்
விளக்கமளிக்கப்பட்டது.
அங்கு கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது
எல்லோரும் தமது சமயத்தை பற்றி குறிப்பிடுகின்றனர்.ஆனால் சமயத்தை
பின்பற்றுகிறோமா என்று கேள்வி எழுகிறது.ஆன்மீகத்தை பின்பற்றும் போதே நற்பண்புகள்
வெளிப்படுகின்றன.
நீர்கொழும்பில் கத்தோலிக்க மக்கள் பெரும்பான்மையாக வசித்து
வருகின்றனர்.பங்குப் பிரிவிற்கும் மக்களுக்கும்; இடையில் நெருக்கம் அதிகரிக்க வேண்டும். கத்தோலிக்க மக்கள் ஏனைய மதத்தவர்கள்
தொடர்;பிலும் கவனம் செலுத்த
வேண்டும்.
நீர்கொழும்பு நகரை அண்மித்ததாக விமான நிலையம், சுதந்திர வரத்தக வலயம் போன்றவை
உள்ளன.நகரில் கருக்கலைப்பு, விபசாரம் ,போதைப் பொருள் வியாபாரம், இளைஞர்கள் தவறாக
வழிநடத்தப்படல் அதிகரித்துள்ளன.இவை தொடர்பாகவும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை
மேம்படுத்தல் தொடர்பாகவும் இந்த வருடம் கவனம் செலுத்வுள்ளோம்.
நகரின் பிரதான வைத்தியசாலை பூமியில் அமைந்துள்ள எமது மதத்தளம் முன்பாக குப்பை
போடப்படுகிறது. இது தொடர்பாக ஜனாதிபதிக்கும் அறிவித்துள்ளோம.; அது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பிரதேச மாகாண அரசியல்வாதிக்கு
உத்தரவிட்டுள்ளார் ஆயினும் ஒருவருடமாகியும் இன்று வரை அங்கு குப்பை கொட்டப்படுகிறது.
;திறந்த பொருளாதார கொள்கை பல
பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது. தனி நபரை வளப்படுத்துவதே திறந்த பொருளாதார
கொள்கையாகும். உலக வங்கி கூறுவது போன்று நாங்கள் நடக்கக் கூடாது. அவர்களின்
தாளத்திற்கு நாங்கள் ஆடக் கூடாது.
மக்களுக்கு பாதிப்பில்லாத சுற்றாடலுக்கு பாதிப்பில்லாத அபிவிருத்தியே
அவசியமாகும் என்றார்.
அங்கு அங்கு அருட் தந்தையர்கள் பெட்ரிக் பெரேரா, பிரான்ஸிஸ் சேனாநாயக்க,
டெரன்ஸ் மோதியா பதுகே, பிரதீப் சமிந்த
உட்பட பலர் உரையாற்றினர்.
No comments:
Post a Comment