நீர்கொழும்பு - கடல் வழியாக சட்ட விரோதமாக அவுஸ்திரேலியா தப்பிச் செல்வதற்காக ஏத்துக்கால
பிரதேசத்தில் உள்ள ஓய்வு விடுதி ஒன்றில் தங்கியிருந்த 6 பேர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு
ஏத்துகால சுற்றுலா பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், அவர்களை வெளிநாட்டுக்கு அனுப்ப முயன்ற மேலும் நான்கு பேரை கைது செய்துள்ளதாகவும்
பொலிஸார் தெரிவித்தனர்
ஏத்துகால சுற்றுலா பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த
நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் சாவகச்சேரி , யாழ்ப்பாணம், மானிப்பாய், மற்றும்
நீர்கொழும்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தமிழர்களாவர்.
சந்தேக நபர்களை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கை
எடுத்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment